ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ரத்து?...
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சையை ரத்துச் செய்வது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தற்போதைய ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சைக்காக சிறுவர்களை கூடிய அழுத்தங்களுக்கு உள்ளாக்கும் பெற்றோரின் செயற்பாடுகள் பெரும் விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளது.
அத்துடன் குழந்தைகளும் கடுமையான அழுத்தங்கள் காரணமாக மனதளவில் பாதிப்புக்கு உள்ளாகின்றார்கள்.
இதனைத் தவிர்க்கும் பொருட்டு எட்டாம் தரம் அல்லது அதற்கு மேற்பட்ட வகுப்பொன்றில் புலமைப்பரிசில் பரீட்சையை நடத்துவது குறித்து அரசாங்கம் ஆலோசித்து வருவதாக தெரிய வந்துள்ளது.
எனினும் இது தொடர்பான எந்தவொரு விடயமும் அமைச்சரவை மட்டத்தில் கலந்துரையாடப்படவில்லை என்றும் குறித்த தகவல்களிலிருந்து தெரியவந்துள்ளது.
அமைச்சரவை அனுமதியின்றி தேசிய மட்ட பரீட்சைகளில் எந்தவொரு விடயத்தையும் மேற்கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.
ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் பரீட்சை ரத்து?...
Reviewed by Author
on
September 29, 2015
Rating:
Reviewed by Author
on
September 29, 2015
Rating:


No comments:
Post a Comment