இந்தியா நினைத்தால் இறுதி நிமிடத்தில் கூட அமெரிக்கப் பிரேரணையை மாற்றலாம்: அன்புமணி ராமதாஸ்...
இந்தியா அழுத்தம் கொடுத்தால் அமெரிக்க பிரேணையில் கடுமையான நிபந்தனைகளை கொண்டு வரலாம் என தமிழகத்தின் பாட்டாளி மக்கள் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு, இந்திய மத்திய அரசுக்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். தமிழக முதலமைச்சர் தீர்மானம் நிறைவேற்றினால் போதாது, தொடர் அழுத்தம கொடுக்க வேண்டும். இன்னும் ஒரு நாள் இருக்கின்றது. இந்த இடைவெளியில் கூட மாற்றத்தைக் கொண்டு வரலாம் என அவர் மேலும் குறிப்பிட்டார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இலங்கையின் தேன்தடவிய வார்த்தைகளை அமெரிக்கா நம்பியுள்ளது: சட்டத்தரணி பாலு
கடந்த காலங்களில் ஐ.நாவில் தீர்மானம் கொண்டுவரப்படும் போது எந்தத் தவறும் நிகழவில்லை என்று சொல்லும் இலங்கை, ஐ.நா மனித உரிமைகள் சபையில் பேசிய வார்த்தைகள் தேன் தடவிய வார்த்தைகளாகவே புலப்படுகின்றது.
இலங்கையின் வார்த்தைகளை நம்பி அமெரிக்கா தனது நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டிருப்பது வேதனையளிக்கிறது. அது எவ்விதத்திலும் பயனளிக்கப் போவதில்லை என பசுமைத் தாயகம் அமைப்பின் சட்ட ஆலோசகர் சட்டத்தரணி பாலு தெரிவித்துள்ளார்.
லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இவ்வாறு தெரிவித்தார்.
இந்தியா நினைத்தால் இறுதி நிமிடத்தில் கூட அமெரிக்கப் பிரேரணையை மாற்றலாம்: அன்புமணி ராமதாஸ்...
Reviewed by Author
on
September 30, 2015
Rating:
Reviewed by Author
on
September 30, 2015
Rating:


No comments:
Post a Comment