நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிட தடை- முதலாவது எதிர்ப்பை வெளியிட்டார் புதிய எதிர்க்கட்சித் தலைவர்...
நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் எவ்வித கருத்துக்களையும் உறுப்பினர்கள் வெளியிட அனுமதிக்கப்பட மாட்டாது.
சபாநாயகர் கரு ஜயசூரிய தலைமையில் நடைபெற்ற கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இது குறித்து தீர்மானிக்கப்பட்டுள்ளது.
எட்டாம் நாடாளுமன்றின் உறுப்பினர்கள், தேசிய ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படும் வகையில் உரைகளை ஆற்ற இடமளிக்கக் கூடாது.
இது தொடர்பில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க முன்வைத்த யோசனையை, சபாநாயகர் ஏற்றுக்கொண்டுள்ளதாக கொழும்பு ஊடகமொன்று தெரிவித்துள்ளது.
முதலாவது எதிர்ப்பை வெளியிட்டார் புதிய எதிர்க்கட்சித் தலைவர்
புதிய அமைச்சரவையின் அமைச்சர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதை ஏற்றுக்கொள்ள முடியாதென எதிர்க்கட்சித் தலைவரும், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவருமான இரா. சம்பந்தன் நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
புதிய எதிர்க்கட்சித் தலைவராக இரா. சம்பந்தன் இன்று தெரிவுசெய்யப்பட்டார். இந்த நிலையில் தனது முதலாவது எதிர்ப்பை அவர் நாடாளுமன்றத்தில் இன்று வியாழக்கிழமை வெளியிட்டார்.
அமைச்சரவை உறுப்பினர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பது தொடர்பான யோசனை பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவினால் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
இது தொடர்பான விவாதம் தற்போது இடம்பெற்றுவருகின்ற நிலையில், இதில் உரையாற்றிய போதே இரா. சம்பந்தன் மேற்கண்டவாறு கூறினார்.
நாடாளுமன்றில் இனவாத கருத்துக்களை வெளியிட தடை- முதலாவது எதிர்ப்பை வெளியிட்டார் புதிய எதிர்க்கட்சித் தலைவர்...
Reviewed by Author
on
September 03, 2015
Rating:

No comments:
Post a Comment