அண்மைய செய்திகள்

recent
-

காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை மறைக்க வேண்டாம் என கோரிக்கை


காணாமல் போனோர் தொடர்பில் உண்மை அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு தமிழ் மக்கள் அச்சமின்றி சாட்சியம் வழங்க வாய்ப்பு ஏற்படுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் பாதுகாப்பு முறையொன்றினை அரசாங்கத்தினால் ஏற்பாடு செய்ய வேண்டும் என காணாமற் போனவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டோ பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

ஐ.நா. நிபுணர் குழு அறிக்கை குறிப்பிடப்பட்டுள்ள சிவில் யுத்தத்தின் இறுதி கட்டத்தின் போது உயிழைந்தவர்களின் எண்ணிக்கை குறித்து காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகம நிராகரித்தமை தொடர்பில் சிங்கள ஊடகமொன்று வினவிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

தொடர்ந்து கருத்து வெளியிட்டவர்,

மன்னார் ஆயரான ஜோசப் ராயப்பு கூறுவதனை போன்று யுத்த பாதுகாப்பு வலயத்திற்குள் நுழைந்தவர்களின் எண்ணிக்கைக்கும் வெளியேறிவர்களின் எண்ணிக்கைக்கு இடையில் வித்தியாசம் உள்ளதனை காணமுடிகின்றது.

அத்துடன் மஹிந்த ராஜபக்ச அரசாங்கத்தினால் இந்த ஆணைக்குழு சர்வதேசத்திடம் காண்பிப்பதற்காக நியமிக்கப்பட்டதனை தவிர உண்மையை உண்மையாக காண்பிப்பதற்கு அல்ல.

எனவே அந்த ஆணைக்குழுவின் மீது நம்பிக்கை வைப்பது கடினமான ஒரு விடயமாகும்.

அதே காலகட்டத்தில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவிடம் முறைப்பாடு செய்ய வந்தவர் மீது பல்வேறு அழுத்தங்கள் பிரயோகிக்கப்பட்டது.

அதனால் பாதிக்கப்பட்டவர்களில் அநேகமானவர்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்கு முன் வந்து முறைப்பாடு செய்யவில்லை.

மற்றைய காரணம் என்னவென்றால் குடும்பத்துடன் அழிக்கப்பட்டவர்கள் சாட்சியளிப்பதற்கு வருகை தந்திருக்க கூடுமா? எப்படியிருப்பினும் இந்த அறிக்கை சர்வதேசத்திடம் காண்பிப்பதற்காக தயாரிக்கப்பட்ட ஒன்றே தவிர உண்மை சம்பவத்தின் அறிக்கையல்ல.

குறித்து காணாமல் போனோர் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவின் தலைவர் மெக்ஸ்வெல் பரணகமவின் கருத்தின் காரணமாக மக்கள் மத்தியில் தற்போதைய அரசாங்கத்தின் மீது அவநம்பிக்கை ஏற்பட்டு விடும்.

இந்நிலையின் போது காணாமல் போனோர் தொடர்பில் உண்மை தகவல்களை சாட்சியளிப்பதற்கு மக்களுக்கு தடை ஏற்படாத வகையில் முறையொன்றினை ஏற்பாடு செய்வது மக்களின் கடமையாகும்.

அவ்வாறு மேற்கொள்ளவில்லை என்றால் உண்மை தகவல்களை வெளிகொண்டு வரமுடியாததோடு, மெக்ஸ்வெல் பரணகம போன்றோர் விரும்பியதனை அறிவிக்க கூடும். எனவே தமிழ் மக்களுக்கு அச்சத்தினை ஏற்படுத்தாது முன் வந்து சாட்சியளிப்பதற்கு கூடிய வகையில் முறையொன்றினை தயாரித்து உண்மையை ஆராய்வது அரசாங்கத்தின் முக்கிய கடமையாகும் என காணாமற் போனவர்களின் குடும்ப ஒன்றியத்தின் தலைவர் பிரிட்டே பிரனாந்து மேலும் தெரிவித்துள்ளார்.
காணாமல் போனோர் தொடர்பிலான உண்மைகளை மறைக்க வேண்டாம் என கோரிக்கை Reviewed by NEWMANNAR on September 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.