அண்மைய செய்திகள்

recent
-

ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்...


இலங்கையின் போர்க்குற்றங்கள் தொடர்பான ஐ.நா. மனித உரிமைகள் ஆணையத்தின் இறுதி அறிக்கையில் 400 இராணுவத்தினரின் பெயர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளதாக பரபரப்புத் தகவல் வெளியாகியுள்ளது.
தேசிய சுதந்திர முன்னணி தலைவர் விமல் வீரவங்சவுக்கு நெருக்கமான இணையத்தளங்கள் இது தொடர்பான செய்தியொன்றை பிரசுரித்துள்ளன.

குறித்த செய்தியில் தொடர்ந்தும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

இலங்கையின் இறுதிக்கட்ட போரில் பங்கேற்ற சுமார் 400 இராணுவத்தினரின் பெயர்கள் போர்க்குற்றவாளிகளாக ஐ.நா. மனித உரிமைகள் ஆணைய இறுதி அறிக்கையில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

ஐக்கிய நாடுகள் ஆணையம் மேற்கொண்ட விசாரணையின்போது தகவல்களை வழங்கிய 6000 பேரின் சாட்சியங்களின் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பான தகவல்களை வழங்கிய சாட்சிகளின் விபரங்கள் 2032ம்ஆண்டு வரை வெளியிடப்படாது என்பதன் காரணமாக சாட்சியங்களின் நம்பகத்தன்மையில் பலத்த சந்தேகம் ஏற்பட்டுள்ளதாகவும் குறித்த இணையத்தள செய்திகள் தெரிவிக்கின்றன.



ஐ.நா. இறுதி அறிக்கையில் 400 போர்க்குற்றவாளிகளின் பெயர்கள்? பரபரப்புத் தகவல்... Reviewed by Author on September 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.