Office 2016 ஐ இலங்கைக்கு முதன் முறையாக வெளியிட்டுள்ள மைக்ரோசொவ்ட்...
Windows 10 ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்ட மைக்ரோசொவ்ட் நிறுவனம் கடந்த 22 ஆம் திகதி Office 2016ஐ உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளது.
இந்த Windows 10 மற்றும் Office 2016 ஆகியன ஒன்றிணைந்து ஒரு முழுமையான தீர்வை வழங்கக் கூடியதுடன் இந்த Office 2016 மென்பொருளானது எந்தவொரு திரையிலும் எப்போதும் மிக அழகாகவும், மிக இலகுவாக பகிரக்கூடியதுடன் சிறந்த விதத்திலும் இயங்கும்.
Windows Hello இனால் Windows மற்றும் Office 365 இல் உள்நுழைவதற்கான இலகுவான முதற்படியாக இது செயற்படும்.
Office 2016 ஆனது Office 365 இல் உள்ளடங்கிய புதிய மென்பொருள் என்பதுடன், அதில் காணப்படும் பல்வேறு அம்சங்களும் அதனால் கிடைக்கக் கூடிய செயற்றிறன் மற்றும் மேம்பாடுகள் ஏராளம் மற்றும் Office 365 இன் சேவைகள் மற்றும் அதிலுள்ள பயன்பாடுகள் மூலம் Office எவ்வாறு விரிவாக்கப்பட்டு சிறந்தவொரு மென்பொருளாகவும் மற்றும் சேவையாகவுமுள்ள ஒரு கூட்டு செயற்றிறன் கொண்ட ஒரு உற்பத்தியாக நிறுவனம் இந்த Office 2016 ஐ வெளியிட்டுள்ளது.
Windows 10 ஒரு சிறந்த சேவையை வழங்குவதோடு, ஒரு சாதனமாக வாழ்நாள் முழுவதும் சிறந்த பாதுகாப்பான, புதுமையான மற்றும் மேம்படுத்தப்பட்ட அனுபவங்களை வழங்குவதோடு Mobile First, Cloud First என்பதற்கு அமைய கணினி சகாப்தத்தின் இதுவொரு ஆரம்பமாக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Office 2016 ஐ இலங்கைக்கு முதன் முறையாக வெளியிட்டுள்ள மைக்ரோசொவ்ட்...
Reviewed by Author
on
September 28, 2015
Rating:
Reviewed by Author
on
September 28, 2015
Rating:


No comments:
Post a Comment