சுவிட்சர்லாந்தின் குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்திட்டுள்ள பள்ளிக்குழந்தைகள்...
சுவிட்சர்லாந்தின் குடியுரிமை அடையாள அட்டையில் பள்ளிக்குழந்தைகள் இருவர் தமிழில் கையெழுத்து போட்டுள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிஸ் நாட்டில் உள்ள அனைவருக்கும் இந்த ஆண்டின் இறுதிக்குள் புதிய அடையாள அட்டை வழங்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த அடையாள அட்டைகள் ஐரோப்பிய நாடுகளுக்கு இடையேயான பயணத்தின் போது பயண அட்டையாகவும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
இந்நிலையில் சுவிஸ் நாட்டில் பிறந்து வளர்ந்த இரண்டு பள்ளிக்குழந்தைகள் தங்களின் அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்து போட்டுள்ளனர்.
சகோதர, சகோதரியான இவர்கள் தங்களின் பெயரை மு.அருளினி எனவும், மு. அம்பலன் எனவும் தமிழிலேயே எழுதியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
சுவிட்சர்லாந்தின் குடியுரிமை அடையாள அட்டையில் தமிழில் கையெழுத்திட்டுள்ள பள்ளிக்குழந்தைகள்...
Reviewed by Author
on
September 28, 2015
Rating:
Reviewed by Author
on
September 28, 2015
Rating:


No comments:
Post a Comment