அனைத்து இன மக்களினது உரிமைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றி கொடுப்பதில் முன்னின்று செயற்படவுள்ளேன் -பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி
அனைத்து இன மக்களினது உரிமைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றி கொடுப்பதில் முன்னின்று செயற்படவுள்ளேன் - பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி
ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்குமான தமது அரசியல் பணியில் அனைத்து இன மக்களினது உரிமைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றி கொடுப்பதில் தாம் முன்னின்று செயற்படவுள்ளதாக பிரதியமைச்சா் அமீா் அலி தெரிவித்துள்ளார்.
மேலும் இப்புனித ஹஜ் பெருநாள் இத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு கிடைத்த பெருபேறு சந்தர்ரப்பமாகும் என கிராமிய பொருளாதார அபிவிருத்தி பிரதியமைச்சா் எம்.எஸ்.எஸ்.அமீா் அலி தனது ஹஜ் பெருநாள் வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவா் புனித ஹஜ் பெருநாளை கொண்டாடும் அனைத்துலக முஸ்லிம் சகோதர சகோதரிகளுக்கும் பெருநாள் நல் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்வதில் பெரும் மகிழ்ச்சியடைகின்றேன். பெருநாளை கொண்டாடும் அனைவரின் மீதும் சாந்தி சமாதானம் உன்டாவதாக எனது ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்குமான 2020 ஆம் ஆண்டை நோக்கிய அமீா் அலியின் இந்த பயனத்தில் நான் பிரதியமைச்சராக தெரிவு செய்யப்பட்ட பிற்பாடு எமது முதல் பெருநாளாக இந்த புனித ஹஜ் பெருநாளை நான் பார்க்கின்றேன்.
முஸ்லிம்களை பெருத்தமட்டில் இப் பெருநாள் ஒரு தியாக திருநாளாக பார்க்கப்படுகின்றது. நபி இப்றாஹீம்,இஸ்மாயில் (அலை)அவா்களின் தியாகத்தை அனைத்துலக மக்களுக்கும் உணர்த்துகொள்ளும் வகையில் இஸ்லாமிய வரலாற்று சரித்திரங்களை நினைவுட்டி அறநெறிகளை பின்பற்றி இந்திருநாள் கொண்டாடப்படுகின்றது.
இந்திருநாளில் நாம் அனைவரும் நாட்டின் சட்ட திட்டங்களைப் பேணி பிற சமயத்தவர்களின் உணர்வுகளையும் மதித்து நடந்து கொள்ள வேண்டியது நமது கடமையும் பொறுப்பாகும்.
இந்த வகையில் ஐக்கியத்திற்கும் அபிவிருத்திக்குமான பங்காளர்களாக நாம் தமிழ், சிங்கள,முஸ்லிம் மற்றும் ஏனைய குழுக்களிடைய ஒன்றிணைப்பையும்,ஒற்றுமையையும் மேலோங்கச் செய்து தேசிய அபிவிருத்தியை நோக்கி காலடி எடுத்து வைக்கும் இக்காலகட்டத்தில் இப் புனித மிகு ஹஜ் பெருநாள் இத் தேவைப்பாட்டினை பூர்த்தி செய்வதற்கு கிடைத்த பெருபேறு சந்தர்ரப்பமாகும் என்பது எனது கருத்தாகும்.
எனவே எமது தாய் நாட்டை வீட்டு வெளிநாடுகளில் எம்மை தொழில் நிமிர்ந்தம் பிரிந்து பெருநாளை கொண்டாடும் எமது உறவுகளுக்கும் எனது பெருநாள் நல்வாழ்த்துக்களை தெரிவித்து கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றேன்.
மேலும் அனைத்து இன மக்களினது உரிமைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றி கொடுப்பதில் தான் முன்னின்று செயற்படவுள்ளதுடன் அதற்கான ஒத்துழைப்பினை தந்துதவுமாறு அன்பாய் வேண்டிக்கொள்வதாக பிரதியமைச்சர் தனது பெருநாள் வாழ்த்துச் செய்தியில் மேலும் தெரிவித்த்துள்ளார்.
அனைத்து இன மக்களினது உரிமைகளையும் சலுகைகளையும் நிறைவேற்றி கொடுப்பதில் முன்னின்று செயற்படவுள்ளேன் -பெருநாள் வாழ்த்துச்செய்தியில் பிரதியமைச்சர் அமீர் அலி
Reviewed by NEWMANNAR
on
September 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 24, 2015
Rating:


No comments:
Post a Comment