வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் கட்டுக்கரை குள திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணிலை சந்திப்பு.-Photos
மல்வத்து ஓயா நீரை கட்டுக்கரை குளத்திற்கு அனைக்கட்டினூடாக கொண்டு சென்று நீரை தேக்கி வைத்து விவசாய நடவடிக்கைகளுக்காக பயன்படுத்துதல் தொடர்பாக மன்னார் கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக் குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் நீர்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா ஆகியோரை இன்று புதன் கிழமை(23) மாலை சந்தித்து உரையாடியுள்ளனர்.
தமிழ் தேசியக்கூட்டமைப்பின் வன்ன மாவட்ட பாராளுமன்ற உறுப்பினரும்,பாராளுமன்ற குழுக்களின் பிரதி அவைத்தலைவருமான செல்வம் அடைக்கலநாதனின் ஏற்பாட்டில் கொழும்பு சென்ற கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க மற்றும் நீர்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா ஆகியோரை சந்தித்து உரையாடியுள்ளனர்.
முதலில் வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் சென்ற கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா அவர்களை சந்தித்து உரையாடினர்.
இதன் போது கட்டுக்கரை குளத்தில் உள்ள நீரை நம்பி சுமார் 30 ஆயிரம் ஏக்கர் விவசாயச் செய்கை மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும்,ஆனால் கட்டுக்கரை குளத்தில் தேக்கி வைக்கப்படும் நீர் சுமார் ஒரு மாத காலத்திற்கு மாத்திரமே போதுமானதாக உள்ளதாகவும்,ஏனைய மாதங்களுக்கு நீர் பற்றாக்குறை ஏற்படுவதாகவும் கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நீர்ப்பாசன அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதே வேளை மழை நீரை கட்டுக்கரை குளத்தில் சேமித்து வைப்பதற்கு கட்டுக்கரை குளத்திற்கான வான் கதவு அமைத்தல் மற்றும் கட்டுக்கரை குளத்திற்கு நீர் பாய்ச்சும் வடிகான்கள் தூய்மைப்படுத்தப்பட வேண்டும் எனவும் மல்வத்து ஓயா நீரை கட்டுக்கரை குளத்திற்கு அனைக்கட்டினூடாக கொண்ட சென்று நீரை தேக்கி வைக்கின்ற நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் எனவும் கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் நீர்ப்பாசன அமைச்சர் விஜயமுனி சொய்சா அவர்களின் கவனத்திற்கு கொண்டு வந்தனர்.
அதனைத் தொடர்ந்து வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் கட்டுக்கரை திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களை சந்தித்து உரையாடினர்.
இதன் போது கட்டுக்கரை குளத்திற்கான வான் கதவு அமைத்தல்,வடிகான்கள் தூய்மைப்படுத்துதல் போன்ற விடையங்களை ஆராய்ந்ததோடு மன்னார் மாவட்டத்தில் உற்பத்தி செய்யப்படுகின்ற நெல்லை கொள்வனவு செய்தல் மற்றும் நெல்லை களஞ்சியப்படுத்துதல் போன்ற விடையங்கள் பிரதமர் ரணில் விக்கிரம சிங்க அவர்களின் கவனத்திற்கு கொண்டு வரப்பட்டது.
மன்னார் மாவட்ட விவசாயிகள் எதிர்நோக்கும் பிரச்சினைகளை கேட்டரிந்த பிரதமர் ரணில் விக்கிராம சிங்க மல்வத்து ஓயா நீரை கட்டுக்கரை குளத்தில் தேக்கி வைப்பதற்கான வேளைத்திட்டத்தை வெகு விரைவில் அரம்பிப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ளுவதாகவும்,மன்னார் மாவட்ட விவசாயிகளின் பிரச்சினைகளுக்கு உரிய நடவடிக்கைகளையும் மேற்கொள்ளுவதாக உறுதியளித்துள்ளார்.
வன்னி எம்.பி செல்வம் அடைக்கலநாதன் தலைமையில் மன்னார் கட்டுக்கரை குள திட்டமிடல் முகாமைத்துவக்குழு உறுப்பினர்கள் பிரதமர் ரணிலை சந்திப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
September 24, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 24, 2015
Rating:





No comments:
Post a Comment