அண்மைய செய்திகள்

recent
-

எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமை வரலாற்று சிறப்புமிக்கது!...


இலங்கை நாடாளுமன்றத்தின் எதிர்க்கட்சித் தலைவராக த.தே.கூட்டமைப்பின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான இரா.சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டதன் மூலம் நாடாளுமன்றம் மிக முக்கியமான வரலாற்று சிறப்புமிக்க தீர்மானத்தை எடுத்துள்ளதாக சிங்கள இணையத்தளம் ஒன்று பாராட்டியுள்ளது.
குற்றவாளிகள், மோசடியாளர்கள், போதைப் பொருள் வியாபாரிகள் மற்றும் இனவாதிகளின் கெடுத்தியான வசஸ்தலமாகி போன நாடாளுமன்றத்தில் கடந்த சில தசாப்தங்களாக நாட்டுக்கு பயன் தரக் கூடிய மற்றும் நாட்டின் எதிர்காலத்திற்கு பங்களிப்புச் செய்யக் கூடிய தீர்மானங்கள் எதனையும் எடுக்கவில்லை.

குறிப்பாக கடந்த மகிந்த ராஜபக்ச அரசாங்கம் மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தை நாடாளுமன்றத்தில் வைத்து கொண்டு, நாட்டை சிங்கள பௌத்த இனவாத அடிப்பணிந்த நாடாக மாற்றியது.

அத்துடன் ராஜபக்ச குடும்பத்தினருக்காக மாத்திரமே முடிவுகளையும் தீர்மானங்களையும் எடுத்தது.

இந்த நிலையில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவரை எதிர்க்கட்சித் தலைவராக தெரிவு செய்தமை மிகவும் கௌரவமான நடவடிக்கை என அந்த சிங்கள இணைத்தளம் குறிப்பிட்டுள்ளது.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை வழங்கிய இந்த வரலாற்று சிறப்புமிக்க அரசியல் எழுச்சியை மேலும் வளர்ச்சியடைய செய்து, நாட்டின் அனைத்து மக்களுக்கும் நன்மைக்காக அதனை ஆட்சியாளர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும் என்றும் அதில் கூறப்பட்டுள்ளது.

சம்மந்தன் எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்கப்பட்டமை சிறுபான்மையினருக்கு கிடைத்த வெற்றி: கிழக்கு முதல்வர்

புதிய எதிர்க்கட்சித் தலைவர் சம்பந்தனுக்கு ஜனாதிபதி வாழ்த்து


எதிர்க்கட்சித் தலைவராக சம்பந்தன் தெரிவு செய்யப்பட்டமை வரலாற்று சிறப்புமிக்கது!... Reviewed by Author on September 03, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.