சிறுவர் தினத்தை முன்னிட்டு 1200 பாடசாலைகளில் குடிநீர், மலசல வசதிகள்...
10,000 பாடசாலைகளில் 525இல் மாத்திரமே நவீன வசதிகள்
உலக சிறுவர் தினத்தை முன்னிட்டு 1200 பாடசாலைகளில் சுத்தமான குடிநீர் நவீன மலசல கூட வசதிகள் நிர்மாணிக்கப்படவுள்ளன. இதற்கென ஒவ்வொரு பாடசாலைகளுக்கும் தலா 02 மில்லியன் ரூபா வழங்கப் படவுள்ளதாக கல்வியமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் தெரிவித்து ள்ளார்.
நேற்று (28) கல்விமைச்சில் நடைபெற்ற ஊடகவியலாளர் மாநாட்டின் போதே மேற்கண்டவாறு கல்வியமைச்சர் தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்து தெரிவித்த அமைச்சர், நாட்டில் உள்ள 10119 பாடசாலைகளில் 525 பாடசாலைகளில் மட்டுமே ஒழுங்கான குடிநீர் மற்றும் மலசல கூடங்கள் உள்ளன. ஏனைய பாடசாலைகளில் மலசல கூடங்கள் உடைந்து காணப்படுகின்றன. இதற்காக கல்வியமைச்சு ஆண்கள் பெண்களுக்கென தனியான மலசல கூடங்களை நவீன முறையில் நிர்மாணிக்க உள்ளது.
இதில் முதற்கட்டமாக 1200 பாடசாலைகள் தெரிவு செய்யப்பட்டுள்ளன. அதில் மிக அண்மையிலான சிறந்த பாடசாலை என்ற திட்டத்தின் கீழ் இத் திட்டம் அமுல்படுத்தப்படுகின்றது. 2017 ம் ஆண்டில் சகல பாடசாலைகளுக்கும் மலசல கூட வசதிகள் வழங்கப்பட்டு இதனால் இக் கட்டுமான பணிகள் பாடசாலை அபிவிருத்திச் சங்கத்திடமும் அதிபரிடமும் கையளிக்கப்படும்.
இதற்காக வலயக் கல்விப் பணிப்பாளர் கல்வியியல் பிரிவின் பொறியியலாளர் மற்றும் மாகாண தேசிய பாடசாலைகளினதும் கல்வியமைச்சின் அதிகாரிகள் இத்திட்டத் தினை அவதானிக்கும் குழுவாக நியமிக் கப்படுவார்கள். இத்திட்டத்திற்கான நிதி 2015, 2016ம் ஆண்டின் வரவு செலவுத் திட்டத்தில் இருந்து பெறப்படும் என கல்வியமைச்சர் காரியவசம் இங்கு தெரிவித்தார். அத்துடன் பாடசாலைகளுக்கு மலசல கூட சுத்திகரிப்பாளர் தொழிலுக்கு க.பொ.த. சா¡தாரண தரம் 6 பாடங்கள் சித்தியெய்திருக்க வேண்டும்.
ஆனால் இவ்வாறு சித்தியடைந்தவர்கள் இத் தொழிலுக்கு விருப்பமில்லாமல் உள்ளனர். 8ம் ஆண்டு சித்தியடைந்த வர்களை சேர்த்துக் கொள்ளுவதற்கு பொது நிர்வாக முகாமைத்துவ அமைச் சிற்கு எழுதியுள்ளோம்.
அதன் அனுமதி கிடைத்ததும் 8ம் வகுப்பு சித்தியடைந்த வர்களை மலசல கூட சுத்திகரிப்பு தொழிலாளர்களாக சேர்த்துக் கொள்ளப் படுவார்கள் என அமைச்சர் தெரிவித்தார்.
சிறுவர் தினத்தை முன்னிட்டு 1200 பாடசாலைகளில் குடிநீர், மலசல வசதிகள்...
Reviewed by Author
on
September 29, 2015
Rating:
Reviewed by Author
on
September 29, 2015
Rating:


No comments:
Post a Comment