அண்மைய செய்திகள்

recent
-

சுமார் 6 இலட்சம் பக்தர்கள் ஒன்று கூடுவரென எதிர்பார்ப்பு...

 நல்லூர்க் கந்தன் தேர்த் திருவிழா:

ஒத்துழைப்பு வழங்குமாறு பொதுமக்களிடம் பொலிஸார் வேண்டுகோள்

நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா உற்சவத்தை எந்தவித தடையுமின்றி நடத்துவதற்கு பொது மக்கள் முழுமையான ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என யாழ் பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லர் அனைத்து மக்களிடமும் வேண்டுகோள் விடுத்துள்ளார். கடந்த ஓகஸ்ட் 19ஆம் திகதி முதல் ஆரம்பமான நல்லூர் கந்தனின் உற்சவம் எதிர்வரும் 13ஆம் திகதிவரை நடை பெறுகிறது. இதற்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் தொடர்பாக யாழ். பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரி உதயகுமார வுட்லரை அவருடைய அலுவலகத்தில் சந்தித்துக் கேட்டபோதே அவர் இந்த வேண்டுகோளை முன்வைத்தார்

நேற்றையதினம்வரை புலம்பெயர் தமிழ் மக்கள் உட்பட நாடு முழுவதி லுமிருந்து சுமார் 3 இலட்சம்பேர் வரையில் நல்லைக் கந்தனைத் தரிசித்ததாக கூறிய அவர், நாளை நடைபெறும் தேர்த் திருவிழாவுக்கு இத்தொகை இரட்டிப்பாக இருக்கும் என்றும் அதற்குரிய சகல பாதுகாப்பு ஏற்பாடுகளும் பூர்த்தி செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

நல்லைக்கந்தன் ஆலய சுற்றுப்புறத்தில் சுமார் 150 பொலிஸ் உத்தியோகத்தர்கள் சிவில் உடையில், 24 மணிநேர பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளதாகவும், வீதிப் பாதுகாப்பு மற்றும் போக்குவரத்து நெரிசல்களைக் கட்டுப்படுத்துவதற்கும் விசேட பொலிஸ் படையணியொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருப்பதாகவும் கூறினார்.

யாழ். குடாநாட்டிலுள்ள சுமார் 350 பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வெளிமாவட்டங்களிலிருந்தும் மேலதிகமாக 300 பொலிஸ் உத்தியோகத்தர்கள் விசேட கடமைக்காக அழைக்கப்பட்டிருப்பதாகவும் அவர் சுட்டிக்காட்டினார். உலகில் வாழும் அனைத்து இந்து மக்களாலும் போற்றப்படுகின்ற புனிதமான நல்லைக்கந்தனின் உற்சவம் எந்தத் தடையும் இன்றி சிறப்பாக நிறைவாக நிறைவுசெய்ய வேண்டும் என்பதாலேயே பொது மக்களின் ஒத்துழைப்பு மிகவும் அத்தியாவசியமானது என்றும் தெரிவித்தார்.

இதேவேளை, ஆலய சூழலுக்குள் அடியார் ஒருவரின் தங்கச் சங்கிலியொன்றை புத்தளம் பகுதியைச் சேர்ந்த பெண் ஒருவர் கொள்ளையிட்ட சம்பவத்தைத் தொடர்ந்து அடியார்களின் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது. தேர்த் திருவிழாவன்று தமது வீடுகளைப் பூட்டிவிட்டு எல்லோரும் குடும்ப சகிதமாக ஆலயத்துக்கு வருவதால் பூட்டிக்கிடக்கும் வீடுகளின் பாதுகாப்பை உறுதிசெய்யும் வகையில் வீதி வீதியாக ஒழுங்கைகள் ஊடாக விசேட பொலிஸ் ரோந்து சேவையொன்றை நடத்துவதற்குத் திட்டமிட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.

நாளை காலை நல்லைக்கந்தனின் தேர்த்திருவிழா ஆரம்பிப்பதற்கு முன்னதாக 650 பொலிஸாருக்கும், பாதுகாப்புக் கடமையில் ஈடுபடுவதற்கான உத்தரவுகளை பிறப்பித்துள்ளதாகவும் தெரிவித்தார்.

சுமார் 6 இலட்சம் பக்தர்கள் ஒன்று கூடுவரென எதிர்பார்ப்பு... Reviewed by Author on September 10, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.