இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டின் கீழ் இந்திய மீனவர்கள் 15 பேர் இன்றைய தினம் அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளனர்.
இன்றைய தினம் அதிகாலை யாழ்.பருத்தித்துறை கடல் பகுதியில் நுழைந்து தொழிலில் இந்திய மீனவர்கள் ஈடுபடுவது தொடர்பாக பருத்தித்துறை மீனவர்கள் கொடுத்த முறைப்பாட்டின் அடிப்படையில் இலங்கை கடற்படையினர் கைது செய்துள்ளனர்.
இதில் இரு இழுவை படகுகளும் 15 மீனவர்களும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இவர்கள் யாழ்.கடற்றொழில் நீரியல்வளத்துறை திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படவுள்ளனர்.
இலங்கை கடல் எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இந்திய மீனவர்கள் 15 பேர் கைது!
Reviewed by NEWMANNAR
on
September 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 22, 2015
Rating:


No comments:
Post a Comment