போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா பேச்சாளர்
ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் ஆணையாளர் வெளியிட்ட அறிக்கையின்படி, போர்க்குற்ற விசாரணைகளின் போது விடுதலைப் புலிகளுக்கு நிதி வழங்கியவர்களுக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும்.என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவை பேச்சாளர் ரவீனா தெரிவித்துள்ளார்.
அத்துடன் அவர்கள் சார்பில் வெளிநாடுகளில் இயங்கியவர்களுக்கும் விசாரணைகளில் ஒரு பங்காக இருப்பர் என்று ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையகத்தின் சிறப்பு பேச்சாளர் ரவீனா சம்டாசனி தெரிவித்துள்ளார்.
இலங்கையின் அரசாங்க ஆங்கில ஊடகம் ஒன்றுக்கு வழங்கியுள்ள செவ்வியில் அவர் இதனைக்குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமைகள் ஆணையாளரின் அறிக்கை வெளியிட்ட அடிப்படையில் அதில் இலங்கை இராணுவம் மற்றும் விடுதலைப் புலிகள் மீது குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்தநிலையில் அறிக்கையின் பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதே இலங்கை அரசாங்கத்தின் அடுத்தகட்ட பணியாக இருக்கிறது என்று ரவீனா தெரிவித்துள்ளார்.
போர்க்குற்ற விசாரணைகளின் போது புலிகளுக்கு நிதி வழங்கியோரும் உள்ளடக்கப்படுவர்!- ஐநா பேச்சாளர்
Reviewed by NEWMANNAR
on
September 22, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 22, 2015
Rating:


No comments:
Post a Comment