ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்க மினா தயார்...
ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்க மினா பள்ளத்தாக்கு தயார் நிலையில் இருப்பதாக சவூதி அரேபிய அரசு அறி வித்துள்ளது. யாத்திரிகர்கள் இன்று செவ்வாய்க்கிழமை (துல் ஹஜ் 8) மினாவில் அமைந்துள்ள கூடாரங்களை நோக்கி வருகை தருகின்றனர்.
தொடர்ந்து யாத்திரிகர்கள் நாளை அரபா தினத்தை கடைப்பிடிக்கின்றனர்.
யாத்திரிகர்களுக்கு இடையூறு இன்றி அவர்களது கடை மைகளை செய்ய அனைத்து ஏற்பாடுகளையும் மேற் கொள்ளுமாறு இரு புனித பள்ளிவாசல்களினதும் பொறுப் பாளரான மன்னர் சல்மான் பொறுப்புவாய்ந்த அனைத்து நிறுவனங்களையும் அறிவுறுத்தியுள்ளார்.
கடந்த சனிக்கிழமை வரை வெளிநாடுகளில் இருந்து மொத்தம் 1,372,148 யாத்திரிகர்கள் சவூதி அரேபியாவை சென்றடைந்துள்ளனர். சுமார் 308 யாத்திரிகர்கள் மரண மடைந்துள்ளனர்.
சவ+தி மற்றும் உலகெங்கிலும் இருந்து வந்த சுமார் மூன்று மில்லியன் பேரும் சுமார் ஐந்து நாட்கள் வரை நீடிக்கும் ஹஜ் கடமையில் மினா மற்றும் ஏனைய புனி தத் தலங்களில் தமது கடமைகளில் ஈடுபடவுள்ளனர்.
யாத்திரிகர்களின் பாதுகாப்பிற்காக சவூதி அரசு 100,000 பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தி யுள்ளது.
இதில் தீவிரவாத எதிர்ப்பு பிரிவு, போக்குவரத்து பொலிஸ் மற்றும் அவசர சிவில் பாதுகாப்பு பிரிவினர் யாத்திரிகர்களின் பாதுகாப்பான நட மாட்டத்தை உறுதி செய்யவுள்ளனர். இந்த படையினருக்கு உதவியாக இராணுவம் மற்றும் தேசிய பாது காப்பு படையின் மேலதிக துருப்பினர் நிலைநிறுத்தப்பட்டிருப்பதாக சவூதி உள்துறை அமைச்சின் பேச்சாளர் மேஜர் ஜெனரல் மன்சூர் அல்-துர்கி குறிப்பிட்டுள்ளார்.
மக்கா மற்றும் மதீனா எங்கும் அமைக்கப்பட்டுள்ள சுமார் 5,000 சிசிடீவி கெமாராக்களின் மூலம் உள் துறை அமைச்சின் பிரதான மையத் தில் புனிதத் தலங்கள் அனைத்தை யும் பொலிஸார் கண்காணித்து வருகின்றனர்.
'நாம் விழித்துக் கொண்டு தொடர்ந்து செயற்பட்டு வரு கிறோம்" என்று குறிப்பிட்ட அல்-துர்கி, எந்த ஒரு அவசர சூழலுக்கும் முகம் கொடுக்க தயாராக பாதுகாப்பு பிரிவினர் வைக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
பாது காப்பு கடைமைகளுக்கான சவூதி இராணுவத்தினர், பொலிஸார் உட்பட பாதுகாப்பு படையினர் கடந்த வியாழனன்று மக்கா நகரில் நெருப்பு வளையங்க @டே பாய்ந்தும், தீவிரவாத தாக்குதல் ஒன்றின் போது முகம் கொடுக்க வேண்டி தீவிர பயிற்சிகளிலும் ஈடுபட் டனர்.
இந்நிகழ்வில் முடிக்குரிய இளவரசர் பின் நைப்பும் பங்கேற்றிருந்தார்.
இன்று செவ்வாய்க்கிழமை முதல் ஹஜ் முடியும்வரை மினாவில் பாதுகாப்பு கடைமைகளில் ஈடுபட 3000க்கும் அதிகமான சிவில் பாதுகாப்பு படையினர் அங்கு நிலை நிறுத்தப்படவுள்ளனர்.
அதேபோன்று மக்கா புனித தலங்களில் 17,600 சிவில் பாதுகாப்பு படையினர் நிலை நிறுத்தப்பட்டுள்ளனர்.
மறுபுறம் அண்மையில் மக்கா பெரிய பள்ளிவாசலில் கிரேன் சரிந்து விழுந்த விபத்தில் காயமடைந்தவர்கள் தமது ஹஜ் கடமையை நிறைவேற்ற மருத்துவ குழுக்க ளுடன் கூடிய விசேட கார் வண்டிகளை பயன்படுத்தும் ஏற்பாடுகளை சவ+தி சுகாதாரத் துறை திணைக்களம் மேற்கொண்டுள்ளது.
ஹஜ் யாத்திரிகர்களை வரவேற்க மினா தயார்...
Reviewed by Author
on
September 22, 2015
Rating:
Reviewed by Author
on
September 22, 2015
Rating:


No comments:
Post a Comment