அண்மைய செய்திகள்

recent
-

தூக்கிலிடும் பணியை ஏற்றுக் கொள்ள பெண்ணொருவர் முன்வந்துள்ளார்...


இலங்கையில் வெற்றிடமாக உள்ள தூக்கிலிடுபவருக்கான பணியை ஏற்றுக்கொள்ள பெண்ணொருவர் சம்மதம் தெரிவித்துள்ளார்.
பாரிய குற்றச்செயல்களில் ஈடுபடுவோருக்கு விதிக்கப்படும் மரண தண்டனையை நிறைவேற்ற அலுகோசுவா எனப்படும் தூக்கிலிடுபவர் இல்லாத காரணத்தால் நீண்டகாலமாக இலங்கையில் தூக்குத் தண்டனை நடைமுறைப்படுத்தப்படுவது இல்லை.

பெண்கள் மற்றும் சிறுவர்களுக்கு எதிரான வன்முறைகளைக் கட்டுப்படுத்த இலங்கையில் மீண்டும் தூக்குத்தண்டனையை அமுல்படுத்த வேண்டும் என்ற கோசம் பல தரப்பிலிருந்தும் எழத் தொடங்கியுள்ளது.

அவ்வாறு தூக்குத்தண்டனையை நடைமுறைப்படுத்த சிறைச்சாலைகள் திணைக்களமும் தயாராக இருப்பதாக அறிவித்துள்ளது.

இந்நிலையில் தூக்கிலிடும் பணியை ஏற்றுக்கொள்ளத் தயாராக இருப்பதாக கொட்டதெனியாவ பிரதேச பெண்ணொருவர் ஊடகங்களிடம் கருத்து வெளியிட்டுள்ளார். சிறுமி சேயாவின் மரணம் தன்னை அந்தளவு பாதித்து விட்டதாகவும், இது போன்ற குற்றச்செயல்களில் ஈடுபடுவோர் கண்டிப்பாக தூக்கிலிடப்பட வேண்டும் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

தூக்கிலிடும் பணியை ஏற்றுக் கொள்ள பெண்ணொருவர் முன்வந்துள்ளார்... Reviewed by Author on September 22, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.