இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி...
மேற்கிந்தியத் தீவுகள் கிரிக்கெட் அணி இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட் போட்டிகள், 3 ஒருநாள் போட்டிகள் மற்றும் 2 இருபதுக்கு 20 போட்டிகளில் விளையாடவுள்ளது.
இலங்கை தொடருக்கான மேற்கிந்தியத் தீவுகள் டெஸ்ட் கிரிக்கெட் அணியின் தலைவராக ஜோசன் ஹோல்டர் நியமிக்கப்பட்டுள்ளார். ஒக்டோபர் மாதம் 1ஆம் திகதி மேற்கிந்தியத் தீவுகள் அணி இலங்கை வந்தடையும். அதைத் தொடர்ந்து 8ஆம் திகதி முதல் 10ஆம் திகதிவரை 3 நாள் பயிற்சிபோட்டியில் விளையாடவுள்ளது.
முதலாவது டெஸ்ட் போட்டி 14ஆம் திகதி முதல் 18ஆம்திகதிவரை காலியிலும்இ இரண்டாவது டெஸ்ட் போட்டி 22ஆம் திகதி முதல் 26ஆம் திகதிவரை கொழும்பு பி.சரா சர்வதேச கிரிக்கெட் அரங்கத்திலும் நடைபெறவுள்ளது.
முதலாவது ஒருநாள் போட்டி நவம்பர் 1ஆம் திகதியும் இரண்டாவது போட்டி 4ஆம் திகதியும் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறுகிறது. மூன்றாவது போட்டி நவம்பர் 7ஆம் திகதி பல்லேகலையில் நடக்கிறது. நவம்பர் 9 மற்றும் 12ஆம் திகதிகளில் இருபதுக்கு 20 போட்டிகள் கொழும்பு ஆர்.பிரேமதாஸ மைதானத்தில் நடைபெறவுள்ளது.
இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளும் மேற்கிந்தியத் தீவுகள் அணி...
Reviewed by Author
on
September 08, 2015
Rating:

No comments:
Post a Comment