பல்கலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஜெயவர்த்தனபுர அணி சம்பியன்...
அகில இலங்கை பல்கலைக்கழகங்களுக்கு இடையே நடைபெற்ற வலைப்பந்தாட்டப் போட்டியில் கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக அணி அகில இலங்கை சம்பியனானது.
யாழ்ப்பாணம் பல்கலைக்கழக விளையாட்டு மைதானத்தில் ஞாயிற்றுக் கிழமைபிற்பகல் நடை பெற்ற இறுதிப் போட்டியில் கண்டி பேராதனைப் பல்கலைக் கழக அணியும் கொழும்பு ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணியும் மோதிக் கொண்டன.
நான்கு கால் பாதி ஆட்டங்களை கொண்ட இந்தப் போட்டியில் முதற் கால் பாதி ஆட்டத்தில் ஜெயவர்த்தனபுர அணி 12–06 என்ற புள்ளிகள் அடிப்படையில் வெற்றி பெற்று மைதானத்தில் தனது ஆதிக்கத்தை நிலை நாட்டத் தொடங்கியது.
இரண்டாம் கால் பாதி ஆட்டத்திலும் மேலும் 12–புள்ளிகள் என்ற நிலையில் முன்னிலை பெற்றது. ஆட்ட நிறைவில் ஜெயவர்த்தனபுர பல்கலைக் கழக அணி 42–30 என்ற புள்ளிகள் அடிப்படையில் பேராதனைப் பல்கலைக்கழக அணியை வெற்றி கொண்டு பல்கலைக்கழகங்களுக்கு இடையேயான போட்டியில் அகில இலங்கை ரீதியில் 2015ஆம் ஆண்டுக்கான சம்பியனாக தெரிவு செய்யப்பட்டது.
பல்கலைகளுக்கிடையிலான வலைப்பந்தாட்டப் போட்டியில் ஜெயவர்த்தனபுர அணி சம்பியன்...
Reviewed by Author
on
September 08, 2015
Rating:
No comments:
Post a Comment