பூர்வீக இடங்களில் முஸ்லிம்கள் குடியேறுங்கள்: டெனிஸ்வரன்...
மன்னார் மாவட்டத்தில் கடந்த யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம் மக்கள் மன்னாரில் உள்ள தமது பூர்வீக இடங்களில் விரைவாக குடியேறுங்கள் என வட மாகாண கிராமிய அமைச்சர் பா. டெனிஸ்வரன் அழைப்பு விடுத்துள்ளார்.
புத்தளம் தில்லையடி முஹாஜிரின் அரபுக்கலூரிக்கு விஜயம் மேற்கொண்ட வடக்கு மாகாண கிராம அபிவிருத்தி அமைச்சர் பா.டெனிஸ்வரன் யுத்த காலத்தில் மன்னார் மாவட்டத்தில் இருந்து இடம்பெயர்ந்த முஸ்லிம்களை அங்கு சந்தித்து கலந்துரையாடும் போதே இதனைத் தெரிவித்தார்.
மன்னார் மாவட்டத்திலிருந்து யுத்த காலத்தில் இடம்பெயர்ந்த முஸ்லிம்களை விரைவாக மன்னார் மாவட்டத்தில் மீளக்குடியமருமாறு அழைப்பு விடுக்கின்றேன்.
வடக்கு மாகாணத்தின் அனைத்து மக்களுக்கும் இனம் என்பதை கடந்து நாம் அனைவரும் வடக்கு மக்கள் என்னும் ஓர் பார்வையிலே சேவையாற்றுகின்றேன்.
வெறுமனே பேச்சில் மாத்திரமல்ல இன ஒற்றுமை என்பது அது நமது செயல்ப்பாட்டிலும் இருக்கவேண்டும் எனவும் தெரிவித்தார்.
பூர்வீக இடங்களில் முஸ்லிம்கள் குடியேறுங்கள்: டெனிஸ்வரன்...
Reviewed by Author
on
September 01, 2015
Rating:

No comments:
Post a Comment