சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கையருக்கு உரித்தான விசாரணைப் பொறிமுறை...
இணை அனுசரணையாளராக இணையும் இலங்கையின் தீர்மானம் வரவேற்புக்குரியது
சர்வதேச ஈடுபாடு மற்றும் ஒத்துழைப்புடன் இலங்கையால் முன்னெடுக்கப்படும் நம்பகத் தன்மையான நீதி விசாரணைக்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையில் முன்வைக்கப்பட்டிரு க்கும் பிரேரணை மிகவும் முக்கியமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது. இலங்கை தொடர்பாக ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் சமர்ப்பிக்கப்பட்டிருக்கும் அறிக்கை தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டிருக்கும் அமெரிக்காவின் இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெரி இவ்வாறு கூறியுள்ளார்.
இந்தப் பிரேரணைக்கு இணை அனுசரணையாளராக இணைந்து கொள்வதென்ற இலங்கை அரசாங்கத் தின் தீர்மானமானது, பிரேரணையில் குறிப்பிடப்பட்டவற்றை சகலரும் இணைந்து அர்ப்பணிப்புடன் மேற்கொள்வதற்கான வழியை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அமெரிக்காவும் ஏனைய நட்பு நாடுகளும் இணைந்து சமர்ப்பித்திருக் கும் பிரேரணையானது உண்மை, நீதி, நட்டஈடு என்பவற்றை உறுதிப்படுத்தல், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதை உறுதிப் படுத்தல், நல்லிணக்கத்தை ஊக்குவித்தல் மற்றும் சகல இலங்கையர்களுக்குமான சமாதானத்தை உறுதி செய்வதற்கு மிகவும் முக்கியமானது என அமெரிக்கா தெரிவித்துள்ளது.
நீண்டகாலமாக இலங்கையில் காணப்பட்ட பிரிவினைவாதப் போக்கு நாட்டின் பலத்தை இழக்கச் செய்திருந்த நிலையில், இந்நிலை மையை மாற்றுவதற்கு இலங்கையர்கள் இரண்டு தடவைகள் வாக்களித்துள்ளனர். கடந்த காலங்களில் ஏற்பட்ட கசப்பான அசம்பாவிதங்கள் மீண்டும் ஏற்படாதிருப்பதை உறுதி செய்யும் அதேநேரம், சகல இலங்கை யர்களுக்கும் சுதந்திரத்தை ஏற்படுத்து வதற்கும், ஜனநாயகத்தை உறுதி செய்வதற்கும் இலங்கை அரசாங்கம் எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஒத்து ழைப்பு வழங்கும் வகையிலேயே இந்தப் பிரேரணை சமர்ப்பிக்கப்பட் டுள்ளது என ஜோன் கெர்ரி சுட்டிக் காட்டியுள்ளார்.
சர்வதேச ஈடுபாடு மற்றும் ஒத் துழைப்புடன் இலங்கையால் முன் னெடுக்கப்படும் நம்பகத் தன்மையான நீதி விசாரணைக்கு இந்தப் பிரேரணை மிகவும் முக்கியமான படிநிலையாக அமைந்துள்ளது. இந்தப் பிரேரணை யானது காணாமல்போன தமது உறவுகளுக்கு என்ன நடந்தது என்பதை அவர்களின் குடும்பங்கள் அறிந்து கொள்வதற்கான வழியை ஏற்படுத்தும்.
உண்மை, நீதி, நட்டஈடு என்பவற்றை உறுதிப்படுத்தல், கடந்த காலங்களில் இடம்பெற்ற சம்பவங்கள் மீள இடம்பெறாமல் இருப்பதை உறுதிப்படுத்த, நல்லிணக்கத்தை ஊக்குவிப்பதற்கான பாதையை அமைக்கும் வகையிலும், கெளரவமான முறையில் செயற்பட்ட இராணுவத்தினர் மற்றும் நேர்மையாக, தொழில்சார் ஒழுக்கவிதிகளுக்கு அமைய நடந்த அதிகாரிகளின் நற்பெயரை பாதுகாக்கும் வகையிலும் இப்பிரேரணை அமைந்துள்ளது.
இந்த வருடத்தின் முற்பகுதியில் கொழும்பில் தான் கூறியதைப் போன்று, இலங்கையின் இந்த முக்கியமான மற்றும் சவாலான செயற்பாடுகளை முன்னெடுப்பதற்கு அமெரிக்கா அர்ப் பணிப்புடன் தொடர்ந்தும் இணைந்து செயற்படும் என்பதில் உறுதியாக இருப்பதாகவும் அமெரிக்க இராஜாங்கச் செயலாளர் ஜோன் கெர்ரி மேலும் தெரிவித்துள்ளார்.
சர்வதேச ஒத்துழைப்புடன் இலங்கையருக்கு உரித்தான விசாரணைப் பொறிமுறை...
Reviewed by Author
on
September 27, 2015
Rating:
Reviewed by Author
on
September 27, 2015
Rating:


No comments:
Post a Comment