அண்மைய செய்திகள்

recent
-

காதைப் பிளக்கும் சத்தம் கருவிலுள்ள சிசுவுக்கும் ஆபத்து...


செவிப்புலனற்றோர் தினம் நாளை

லீhளுக்கு நாள் அங்கவீனமடைந் தோர் எண்ணிக்கை சமுதாய த்தில் அதிகரித்துக்கொண்டு வருவதை நாம் காணக்கூடியதாக இருக் கின்றது. விஞ்ஞானமும் தொழில்நுட்பமும் வளர்ச்சியடைந்து வருகின்ற போதிலும் மனிதன் நூற்றுக்கு நூறு வீதம் பூரணமடை ந்த நிலையை காணமுடியாதுள்ளது. ஒரு ஊரில் ஒன்று அல்லது இரண்டு என இருந்த அங்கவீனர்கள் எண்ணிக்கை இன்று வீட்டுக்கு வீடு என அதிகரித்துள்ளது.

அங்கவீனர்களில் செவிப்புலனற்றோர் ஒரு வீதமானோராவர். செவிப்புலனை இழக்கின்றவர்கள் தானாகவே பேசும் திறனை இழந்து விடுகின்றார்கள். செவிப் புலனை இழந்த தன்மையை இவர்களில் காண முடியாத போதிலும் பேச்சுத்திறனை இழந்த தன்மை இவர்களை ஏனையோர் களிடமிருந்து இலகுவில் இனங்காட்டி விடுகின்றது.

நாம் ஒரு சத்தத்தை அல்லது பேச்சை உள்வாங்கினால் மட்டுமே எம்மால் அவ்வாறான ஒரு சத்தத்தை அல்லது பேச்சை வெளிப்படுத்த முடியும். எந்த விதமான சத்தத்தையோ, பேச்சையோ செவிமடுக்காத ஒருவரால் ஒருபோதும் அவ்வாறான ஒரு சத்தத்தையோ பேச் சையோ வெளிப்படுத்த முடியாது. இவ் வாறு பேசும் திறன் இல்லாதவர்களின் இந்நிலைக்கு மிக முக்கியமான காரணம் செவி ஏற்கும் தன்மையை இழந்தமையே ஆகும். இந்த செவிப்புலனற்ற தன்மை ஏற்படுவதை தடுத்துக் கொள்வதில் பெற்றோர்களின் பங்களிப்பு 75 வீதத்தில் உள்ளது எனலாம்.

ஒரு குழந்தை கருவில் உருவான நிலையில் இருந்தே அதை பேணிப் பாதுகாக்க வேண்டிய பாரிய கடமையும் பொறுப்பும் பெற்றோருக்கு உள்ளது. தாயின் போசனையான உணவுப் பழக்கத்துடன் தந்தையின் நல்ல பழக்க வழக்கங்களும் பாரிய பங்களிப்பு செய்கின்றது. இங்கு தாயின் மனநிலையைப் பாதிக்காதவாறு தந்தையின் நன்னடத்தை அமைவது முக்கியமானதாகின்றது.

அத்துடன் குழந்தையானது கருவில் இருக்கும்போதே சத்தம், அதிர்ச்சி, அதிர்வு என்பவற்றில் இருந்து பாதுகாக்கப்பட வேண்டும். இன்று இன்ரநெற் உலகம் எனக் கூறப் படுகின்றது. கையடக்கத் தொலைபேசி நாளுக்கு நாள் வளர்ச்சி கண்டு வருகின்றது. சில பெற்றோர் இதன் பின்விளைவை அறி யாது ஒரு காரியத்தை செய்கின்றார்கள். வயிற்றில் இருக்கும் தன் சிசு கேட்கிறது என்பதற்காக தொலைபேசியை வயிற்று டன் இணைத்து அதனை செவியுறச் செய்கிறார்கள்.

கையடக்கத் தொலைபேசி அளவில் சிறிதாக இருந்தாலும் அதன் அதிர்வு “வைப்ரேட்” கருவில் உள்ள சிசு கேட் கக்கூடிய அளவு சிறிதாக இல்லை. அந்த அதிர்வு குழந்தையின் செவிப்பறையை சேதப்படுத்தும் வல்லமை கொண்டது என்பதை மறந்து விடுகின்றார்கள். இதனை முற்றாக தவிர்த்துக்கொள்ள வேண்டும்.

இசைக் கச்சேரிகளின் போது உண்டாகும் அதிகூடிய சத்தத்தை பெரியவர்களாலேயே தாங்க முடியாதபோது சில தம்பதியர்கள் குழந்தையை வயிற்றில் சுமந்த நிலையில் பொழுது போக்குக்காக. மன நிம்மதிக்காக இவற்றை நாடிச் செல்வதை பெருமையாகக் கருதி செல்கிறார்கள்.

இதுவும் தவிர்க்கப்பட வேண்டிய ஒரு விடயமாகும். உலகில் வாழ்கின்ற அதிகமான மக்கள் இறை வனைப்பற்றி நம்பிக்கை உடையவர்களாகவே இருக்கின்றார்கள். அவர்கள் யாவரும் எல்லாச் சந்தர்ப்பங்களிலும் தனது இறை வனை நம்பி தமது கஷ்ட துன்பங்களை மனமாற அவனிடமே முறையிடுகின்றார்கள்.

இதே போன்றுதான் ஒரு குழந்தையை வயிற்றில் சுமக்கும் தாயின் பிரார்த்னைகள் எப்போதும் ‘இறைவா இவ்வுலகையே எனக்கு செல்வமாக்கி தந்து விட்டபோதும் எனது வயிற்றில் உள்ள குழந்தையை குறையுள்ள குழந்தையாகத் தந்துவிட்டால் அச் செல்வத்தால் எனக்கு எந்த மகிழ்ச்சியும் இல்லை. எனவே என் குழந்தையை எந்தக் குறையுமில்லாத, ஆரோக்கியமான நன்நடத்தையுள்ள, அறிவும் ஆற்றலும் உள்ள குழந்தையாக தந்துவிடு’ என்று மன்றாடிக் கேட்க வேண்டும்.

தர்மம் தலைகாக்கும் என்பார்கள். தக்க சமயத்தில் உயிரையும் காக்கும். எனவே ஒரு குழந்தையை வயிற்றில் சுமந்த நிலையில் அதிகமான தான தர்மங்கள் செய்வது மிக முக்கியமானதாக உள்ளது.

குழந்தை பிறந்து விட்டால் அத்தாய் விழிப்புணர்வுடன் இருக்க வேண்டும் எனது குழந்தை ஒளியின் பக்கம் பார்வை செலுத்துகின்றதா? சத்தங்களை கேட்கும் போது திடுக்கிட்டு விழிக்கின்றதா? அதன் செயற்பாடுகள் சாதாரணமான வையா? என்று விழிப்புடன் இருக்க வேண்டும். ஏதாவது அசாதாரண நிலைகளை அவதானித்தால் உடனே வைத்தியரை நாடவேண்டும்.

சில குழந்தைகள் வீரிட்டு அழுவார்கள். அழும் போதெல்லாம் பெரியவர்கள் வயிற்று வலியாகத்தான் இருக்கும் என நினைத்து வயிற்று வலிக்கான வைத்தியத்தையே மேற்கொள்கின்றார்கள். ஆனால் சில வேளைகளில் அது காது சம்பந்தப்பட்ட விடயமாகவும் இருக்கலாம்.

எனவே ஒரு விடயத்தை ஒரேமாதிரி சிந்திக்காமல் பல விதத்திலும் நாம் சிந்திக்க வேண்டும். குழந்தைகளை குளிப்பாட்டும்போது காதுகளுக்குள் நீர் செல்லாதவாறு உள்ளங்கையில் தலையைத் தாங்கி பெருவிரல் மற்றும் சுட்டுவிரலால் காதுகளை மூடிக்கொள்ள வேண்டும். இரு முனையும் பஞ்சுகள் சுத்தப்பட்ட ‘கொட்டுன் பட்’ எனப்படும் ஒருவிதமான துடைப்பானைப் பயன்படுத்தி காதுகளை துடைக்கின்றார்கள். இவற்றின் பஞ்சுகள் குழந்தைகளின் காதுகளில் சிறிது சிறிதாக தேங்கி நின்று அவற்றினாலும் குழந்தைக ளின் செவிப்பறை மென்சவ்வுகள் பாதிப் புக்குள்ளாகின்றன.

காதுகளை துடைக் கும்போது பருத்தி துணியால் மெல்லியதாக திரிசெய்து அத்துடன் அத்துணியின் நுனிப்பகுதி நூல்களால் மென்மையாக உறுதி செய்து கொண்டே துடைக்கப்பட வேண்டும். பருத்தித் துணியாக இருந்தாலும் நுனிப்பகுதி கடினமான நிலையில் இருந் தால் அதனை காதுகளுக்குள் செலுத்துவது கூடாது. தவறியேனும் காதுகளின் உட் பகுதியில் குத்திவிட்டால் செவிப்பறை வீங்கும் நிலை ஏற்படும் வீங்கிய நிலை நீடித்து விட்டால் கேட்டல் குறைபாட்டை ஏற்படுத்தி விடும் விரைவில் ஆவியாகாத எண்ணெய்களை ஊற்றுவதை தவிர்த்துக் கொள்ள வேண்டும். சளித்தன்மைகளால் காதுகளில் சீழ் வடியும் நிலைகள் ஏற்ப டலாம்.

இந்நிலையை தொடர்ச்சியாக வைத்துக் கொள்ளக் கூடாது. அவற்றுக்கு உடனே வைத்தியரை நாடி சிகிச்சைகளை பெற்றுக் கொள்வது அவசியமாகின்றது.

காதுகளுக்குள் பூச்சிகள் போய்விட்டால் உடனே நீர் ஊற்றுவது வழக்கம். ஆனால் அந்த நீரில் ஒரு துளி உப்பைச் சேர்த்துக் கொண்டால் உடனே அந்தப்பூச்சி இறந்து மேலே வந்துவிடும், அதன் பின்பு காது களை நன்றாக பருத்தித் துணியால் துடைத்து விட வேண்டும் காதுகளுக்குள் சட்டைப்பின், காதுசுரண்டிகளை போட்டுக் கிண்டுவதையும் தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

காது சொறிகிறது என்று கோழி சிறகு களையும் சிலர் பயன்படுத்துவதுண்டு. அவ்வாறு செய்வதை முற்றாகத் தடுத்துக் கொள்ள வேண்டும் எனவே குழந்தைகள் உட்பட வளர்ந்தவர்கள் வரை செவிகள் தொடர்பான விடயங்களில் விழிப்புடன் இருப்போம்.

காதைப் பிளக்கும் சத்தம் கருவிலுள்ள சிசுவுக்கும் ஆபத்து... Reviewed by Author on September 27, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.