அண்மைய செய்திகள்

recent
-

மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கிற்கு அங்கத்துவச் சான்றிதழ் வழங்கி வைப்பு.-Photos


மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கானது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

மடு,மாந்தை மேற்கு பிரதேசத்திலுள்ள உதைபந்தாட்ட விளையாட்டு வீரர்களினதும், ஆர்வலர்களினதும் நீண்டகால தேவையாகவிருந்த உதைபந்தாட்ட லீக்கானது ஆரம்பிக்கப்பட்டு அது செயற்படுவதற்கான அனுமதியளிக்கப்பட்டு இயங்கிக்கொண்டிருந்த நிலையில் கடந்த 05-09-2015 அன்று இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில் நேற்று 11-09-2015 இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தில் இடம் பெற்ற அங்கத்துவ சான்றிதழ் வழங்கும் நிகழ்வில் மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கிற்கான அங்கத்துவ சான்றிதழை அதன் தலைவர் வைத்திய கலாநிதி ம.மதுரநாயகம் பெற்றுக்கொண்டார்.

லீக்கானது இலங்கை உதைபந்தாட்ட சம்மேளனத்துடன் உத்தியோகபூர்வமாக இணைக்கப்பட்டதனால் இலங்கை உதைபந்தாட்ட சம்மேளத்தினால் வழங்கப்படும் அனைத்து சேவைகளையும் பெற்று லீக்கையும் தமது லீக்கிலுள்ள விளையாட்டு வீரர்களின் விளையாட்டு திறனையும் மேலும் முன்னேற்றப்பாதையில் கொண்டு செல்லலாம் என நம்பிக்கை தெரிவிக்கிறார்.

இவ் லீக்கின் வளர்ச்சிக்கு உதவிய நிர்வாக உறுப்பினர்கள் மற்றும் ஆர்வலர்களுக்கு நன்றி தெரிவிப்பதுடன் தொடர்ந்தும் உதைபந்தாட்ட ஆர்வலர்களின் ஒத்துழைப்பை வேண்டி நிற்கின்றனர்.




மடு மாந்தை மேற்கு உதைபந்தாட்ட லீக்கிற்கு அங்கத்துவச் சான்றிதழ் வழங்கி வைப்பு.-Photos Reviewed by NEWMANNAR on September 14, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.