அண்மைய செய்திகள்

recent
-

தனிச்சிங்கள மொழியில் நன்றி தெரிவித்த தமிழ் உறுப்பினர்...


தமிழ் முற்­போக்கு கூட்­ட­ணியின் சார்பில் ஐக்­கிய தேசியக் கட்­சி­யூடாக தெரி­வா­கி­யுள்ள கண்டி மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார் நேற்று வியா­ழக்­கி­ழமை தனது கன்னி உரையை நிகழ்த்­திய போது தனக்கு வாக்­க­ளித்த மக்­க­ளுக்கு தனிச்­சிங்­கள மொழியில் நன்றி தெரி­வித்தார்.

பாரா­ளு­மன்­றத்தில் நேற்று நடை­பெற்ற அமைச்­ச­ரவை எண்­ணிக்­கையை அதி­க­ரிக்கக் கோரும் பிரே­ரணை மீதான விவாதம் நடை­பெற்­றது. இதில் உரை­யாற்று­வ­தற்கு வேலு­குமார் எம்.பி.க்கு வாய்ப்பு வழங்­கப்­பட்­டது. இதன்­போதே தனது கன்னி உரையை அவர் சிங்­கள மொழியில் ஆற்­றினார்.

20 வரு­டங்­க­ளுக்குப் பிறகு கண்டி மாவட்­டத்­தி­லி­ருந்து பாரா­ளு­மன்­றத்­துக்கு தெரி­வு­செய்­யப்­பட்­டுள்ள ஒரே­யொரு தமிழ்ப் பிர­தி­நிதி என தன்னை அறி­மு­கப்­ப­டுத்­திக்­கொண்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் வேலு­குமார் தனக்கு ஒதுக்­கப்­பட்ட சொற்ப நேரத்தையும் சிங்கள மொழியில் உரையாற்றுவதற்கே பயன்படுத்தியமை குறிப்பிடத்தக்கது.

தனிச்சிங்கள மொழியில் நன்றி தெரிவித்த தமிழ் உறுப்பினர்... Reviewed by Author on September 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.