அண்மைய செய்திகள்

recent
-

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கியதன் மூலம் அமிர்தலிங்கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் : மஹிந்த தரப்பு போர்க்கொடி...


தமிழ்த் தேசியக் கூட்­ட­மைப்பின் தலை வர் சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைத்­தமை தமிழ் பிரி­வி­னை­வா­தத்­திற்கு கிடைத்த மாபெரும் வெற்­றி­யாகும். இதன் மூலம் அமிர்­த­லிங்­கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்­ப­மா­கி­யுள்­ள­தாக போர்க் கொடிதூ க்கும் மஹிந்த சார்பு அணி எம்.பிக்கள் ஜனா­தி­பதி மைத்­தி­ரி­பால சிறி­சேன வெளி­நாட்டு உள­வா­ளி­களின் நிகழ்ச்சி நிரலை முன்­னெ­டுப்­ப­தா­கவும் குற்றம் சாட்­டினர்.

பாரா­ளு­மன்­றத்­தி­லுள்ள குழு அறையில் நேற்று வியா­ழக்­கி­ழமை இடம்­பெற்ற ஊட­க­வி­ய­லா­ளர்கள் மாநாட்­டி­லேயே மஹிந்த சார்பு அணியை சேர்ந்த எம்.பி.க்­க­ளான தினேஷ் குண­வர்­தன, வாசு­தேவ நாண­யக்­கார, விமல்­ வீ­ர­வன்ச மற்றும் உதய கம்­மன்­பில ஆகி­யோரே இவ்­வாறு தெரி­வித்­தனர்.

இங்கு உரை­யாற்­றிய தினேஷ் குண­வர்­தன எம்.பி. குறிப்­பி­டு­கையில்;

ஐக்­கிய மக்கள் சுதந்­திர முன்­ன­ணியின் 56 உறுப்­பி­னர்கள் கையெ­ழுத்­திட்டு குமார வெல்­க­மவை எதிர்க்­கட்சித் தலை­வ­ராக நிய­மிக்க வேண்­டு­மென முன்­ன­ணியின் தலை­வரான ஜனா­தி­பதி மைத்­தி­ரிபால சிறி­சே­ன­வுக்கு கடிதம் கைய­ளித்தோம்.

ஆனால் இது மீறப்­பட்டு பாரா­ளு­மன்ற சம்­பி­ர­தாயம் அர­சி­ய­ல­மைப்பு ஆகி­ய­வற்றை பின்­பற்­றாமல் 16 ஆச­னங்­களை கொண்ட தமிழ் தேசியக் கூட்­ட­மைப்பின் தலைவர் சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டுள்­ளது.

இது பிழை­யான தீர்­மா­ன­மாகும். தனக்கு கிடைத்த தக­வல்­க­ளுக்கு அமை­யவே எதிர்க்­கட்சித் தலைவர் பதவி சம்­பந்­த­னுக்கு வழங்­கப்­பட்­ட­தாக சபா­நா­யகர் எமக்கு தெரி­வித்தார்.
எனவே இவ்­வி­டயம் தொடர்­பான உண்­மை­யான தக­வல்­களை எதிர்­வரும் நாட்­களில் சபா­நா­ய­க­ருக்கு வழங்­குவோம். எதிர்­க்கட்சித் தலைவர் பதவி தொடர்பில் எதிர்­கா­லத்தில் மீளாய்வு செய்­யப்­பட்டு தீர்­மானம் மாற்­றப்­ப­டலாம் என்றார்.

விமல் வீர­வன்ச எம்.பி. இங்கு உரை­யாற்­று­கையில்,

சம்­பந்­த­னுக்கு எதிர்க்­கட்சி தலைவர் பதவி கிடைத்த செய்தி கேட்டு புலம் பெயர் தமி­ழர்கள் கனடா, சுவிட்­சர்­லாந்து, பிரிட்டன் உட்­பட பல்­வேறு நாடு­களில் மகிழ்ச்சி கொண்­டாட்­டங்கள் இடம்­பெ­று­கின்­றன.

எதிர்க்­கட்சித் தலைவர் பதவி வழங்­கப்­பட்­டதன் மூலம் சர்­வ­தேச அங்­கீ­காரம் வழங்­கப்­பட்­டுள்­ளது. எனவே ஐ.நா.மனித உரிமை ஆணைக்­கு­ழுவின் அறிக்­கையை சம்­பந்தன் ஆத­ரிப்­ப­தோடு அதற்கு சர்­வ­தேச அங்­கீ­காரம் கிடைக்கும் நிலைமை உரு­வாகும்.

வெளி­நாட்டு உளவுப் பிரி­வி­னரின் முயற்­சி­க­ளினால் மைத்­தி­ரி­பால சிறி­சேன ஜனா­தி­ப­தி­யானார். இன்று வெளி­நாட்டு உளவுப் பிரி­வி­னரின் நிகழ்ச்சி நிரலை ஜனா­தி­பதி முன்­னெ­டுக்­கின்றார். எமக்­கு­ரிய எதிர்­க்கட்சித் தலைவர் பதவி பிக்­பொக்கட் அடிக்­கப்­பட்­டுள்­ளது. நாடு காட்டிக் கொடுக்­கப்­ப­டு­கி­றது என்றார்.

செய்­தி­யாளர் மாநாட்டில் உத­ய­கம்­மன்­பில எம்.பி உரை­யாற்­று­கையில்,

சம்­பந்­த­னுக்கு எதிர்­க்கட்சி தலைவர் பத­வியை வழங்­கி­யதன் மூலம் தமிழ் பிரி­வி­னை­வா­தி­க­ளுக்கு மாபெரும் வெற்றி கிடைத்­துள்­ளது. இத்­தோடு அமிர்­த­லிங்­கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்­ப­மா­கி­றது.

இதன் மூலம் சம்­பந்தன் இலங்­கையின் அடுத்த பிர­த­ம­ராகும் ஆபத்தும் தலை­தூக்­கி­யுள்­ளது. கூட்­ட­மைப்­பிற்கு எதிர்க்­கட்சித் தலைவர் பதவி கிடைத்­ததை எதிர்க்­க­வில்லை. ஆனால்
நாட்­டுக்கு எதி­ரா­ன­வர்­க­ளிடம் அப் பதவி வழங்­கப்­பட்­டுள்­ள­தையே எதிர்க்கின்றோம் என்றார்.

வாசுதேவ நாணயக்கார எம்.பி. உரையாற்றுகையில்,

சம்பந்தனுக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கியதன் மூலம் தேசிய நல்லிணக்கம் ஏற்படுமானால் அதனை வரவேற் கின்றேன். ஆனால் பாராளுமன்றத்தின் சம்பிரதாயம் அரசியலமைப்பு மீறப்பட்டு எதிர்க்கட்சித் தலைவர் பதவி வழங்கப்பட் டதையே எதிர்க்கின்றோம் என்றார்.


சம்பந்தனுக்கு எதிர்க்கட்சி தலைவர் பதவி வழங்கியதன் மூலம் அமிர்தலிங்கத்தின் இரண்டாம் பாகம் ஆரம்பம் : மஹிந்த தரப்பு போர்க்கொடி... Reviewed by Author on September 04, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.