அரச நிர்வாக சேவையில் புதிதாக 218 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்
அரச நிர்வாக சேவையில் புதிதாக 218 பேரை இணைத்துக்கொள்வதற்கு அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சு தீர்மானித்துள்ளது.
கடந்த வருடத்தில் இடம்பெற்ற போட்டிப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைவாக புதிய உத்தியோகஸ்தர்கள் சேவையில் இணைத்துக்கொள்ளப்படவுள்ளதாக அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, திறந்த பரீட்சையினூடாக 172 பேர் அரச நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
அரச நிர்வாக சேவையில் இணைத்துக்கொள்ளப்படும் புதிய உத்தியோகஸ்தர்கள் அனைவருக்கும் தொழிற்கல்வி கோவைக்கு அமைய செயற்பாட்டு பயிற்சிகள் வழங்கப்படும் எனவும் அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
பயிற்சிகளின் பின்னர் வெற்றிடங்கள் காணப்படும் பகுதிகளில் சேவையில் ஈடுபடுத்தப்படுவார்கள் எனவும் அரச நிர்வாக மற்றும் முகாமைத்துவ அமைச்சின் செயலாளர் ஜே.தடல்லகே சுட்டிக்காட்டியுள்ளார்.
அரச நிர்வாக சேவையில் புதிதாக 218 பேரை இணைத்துக்கொள்ள தீர்மானம்
Reviewed by NEWMANNAR
on
September 20, 2015
Rating:
Reviewed by NEWMANNAR
on
September 20, 2015
Rating:


No comments:
Post a Comment