மன்னாரில் முதலமைச்சர் -தட்சணாமருதமடுவில் இன்று (30.10.2015) குறைநிவர்த்தி நடமாடும் சேவை நடத்தப்பட்டது
மடு பிரதேச செயலக பிரிவில் வடமாகாணசபையும், மன்னார் மாவட்ட செயலகமும் இணைந்து .தட்சணாமருதமடுவில் இன்று (30.10.2015) குறைநிவர்த்தி நடமாடும் சேவை நடத்தப்பட்டது
மன்னார் தட்சணாமருதமடு அ.த.க.பாடசாலையில் வடக்கு மாகாண முதலமைச்சர், நீதியரசர் மாண்புமிகு க.வி.விக்னேஸ்வரன் ஐயா அவர்களினால் ஆரம்பித்து வைக்கப்பட்டது.
வடக்கு மாகாணசபையின் பிரதம செயலாளர் திரு.பத்திநாதன் தலைமையில் இச்சேவை நடத்தப்பட்டது.
இந்நிகழ்வில் வன்னி பாராளுமன்ற உறுப்பினர்கள் செல்வம் அடைக்கலநாதன், சிவசக்தி ஆனந்தன், சிவமோகன், வடமாகாணசபை அமைச்சர்கள் டெனீஸ்வரன், சத்தியலிங்கம், வடமாகாணசபை உறுப்பினர் குணசீலன், வடமாகாண அமைச்சுகளின் செயலாளர்கள், மடு பிரதேச செயலாளர், ஒபர் நிறுவனத்தின் இலங்கைக்கான பிரதிநிதி சூரியகுமாரி, அரச திணைக்களங்களின் தலைவர்கள், பொதுமக்கள் கலந்துகொண்டனர்.
மன்னாரில் முதலமைச்சர் -தட்சணாமருதமடுவில் இன்று (30.10.2015) குறைநிவர்த்தி நடமாடும் சேவை நடத்தப்பட்டது
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 30, 2015
 
        Rating: 
      
 
        Reviewed by NEWMANNAR
        on 
        
October 30, 2015
 
        Rating: 















No comments:
Post a Comment