அண்மைய செய்திகள்

recent
-

சட்டவிரோத கடல் வள அபகரிப்புக்கு எதிரான அஞ்சல் அட்டை போராட்டம் ஆரம்பித்து வைத்தார்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்-Photos


இலங்கையின் வடபுலகடற்பரப்பில் அத்துமீறி உள்நுழைகின்ற இந்திய இழுவைப் படகுகளினால் வடக்கு கடற்பரப்பில் கடல் வளம் கொள்ளையிடப்படுவதை தடுத்து நிறுத்துமாறு கோரி அஞ்சல் அட்டைகளை அனுப்புகின்ற விழிப்புணர்வு செயற்பாட்டினை கிளிநொச்சி மாவட்ட கடற்றொழிலாளர் கூட்டுறவு சங்கங்களின் சங்கங்களின் சமாசம் மேற்கொண்டுள்ளது.

இந்த நிகழ்வு நேற்று பூநகரி கட்றொழிலாளர் கூட்டுறவு சங்க சமாச செயலகத்தில் அதன் தலைவர் பிரான்ஸிஸ் தலைமையில் நடைபெற்றது.இந்நிகழ்வில் கலந்துகொண்டு அஞ்சல் அட்டை போராடத்தை ஆரம்பித்து வைத்து உரையாற்றிய யாழ் மாவட்ட பா.உறுப்பினர் சி.சிறீதரன்

இந்திய மீனவர்களின் அத்துமீறல் தொடர்பாகவும் அவர்கள் கடல்வளத்தை அபகரித்து செல்வது தொடர்பாகவும் நீங்கள் கொண்டிருக்கின்ற உணர்வை நாங்களும் கொண்டிருக்கின்றோம்.இது தொடர்பாக எமது தலைமை பல்வேறு மட்டங்களில் பேசிவருகின்றது.

இத்தகைய கடல்வள இழப்பு எவ்வாறு தனி ஒரு சமுகத்தின் இழப்பல்ல ஒட்டுமொத்த தேசத்தையும் அவர்களின் தேசிய வருவாயையும் பறிக்கின்ற பறிக்கின்ற செயலாகவே பார்க்கின்றோம்.யுத்தத்தால் பாதிக்கப்பட்டு கடற்றொழில் உபகரணங்கள் எதுவும் இன்றி பல்வேறு போராட்டத்தின் மத்தியில் இந்திய இழுவைப்படகுகள் கடல் வளத்தை அள்ளிச்செல்வது மோசமான விளைவுகளை ஏற்படுத்துகின்றது.

எனவே இலங்கை அரசாங்கம் ராஜதந்திர ரீதியாக பேசி கடற்றொழிலாளர்களுக்கு நல்ல தீர்வை பெற்றத்தர வேண்டும் என தெரிவித்தார்.

இந்த அஞ்சல் அட்டைகள் இலங்கை ஜனாதிபதி மைத்திரபாலசிறீ சேனா பிரதம மந்திர ரணில் விக்கிரமசிங்க எதிர்கட்சித்தலைவரும் தமிழ்தேசியக்கூட்டமைப்பின் தலைவருமான சம்மந்தன் இந்திய பிரதமர் நரெந்திரமோடி இலங்கை கடற்றொழில் அமைச்சர் வடக்கு மகாண முதலமைச்சர் விக்னேஸ்வரன் உள்ளிட்ட ஐயாயிரம் பிரமுகர்களுக்கு இந்த அஞ்சர் அட்டைகள் அனுபப்பட்டுள்ளன.

நேற்றைய இந்த நிகழ்வுகளில் கடற்றொழிலாளர் சங்க பிரதிநிதகள் கடற்றொழிலாளர்கள் நலன்விரும்பிகள் கிளிநொச்சி மாவட்ட தமிழ்தேசிய கூட்டமைப்பின் அமைப்பாளர் வேழமாலிகிதன் கலந்துகொண்டனர்.






சட்டவிரோத கடல் வள அபகரிப்புக்கு எதிரான அஞ்சல் அட்டை போராட்டம் ஆரம்பித்து வைத்தார்: பா.உறுப்பினர் சி.சிறீதரன்-Photos Reviewed by NEWMANNAR on October 30, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.