அண்மைய செய்திகள்

recent
-

டெங்குவினால் 40 பேர் பலி...


ஒக்டோபர் மாதம் 15 ஆம் திகதி வரையான காலப்பகுதியில் டெங்குவினால் 40 பேர் உயிர் இழந்துள்ளனர்.

சுகாதார அமைச்சின் தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் தகவல்களின் பிரகாரம், கடந்த வருடத்தைப் பார்க்கிலும் இவ்வருட ஆரம்பம் முதல் இம்மாதத்தின் நடுப்பகுதி வரையான காலப்பகுதியில் டெங்கு நோயினால் உயிர் இழந்தவர்களின் எண்ணிக்கை குறைவாகக் காணப்படுகிறது

நாடளாவிய ரீதியில் டெங்கு நோய் தொடர்பில் பதிப்பட்டுள்ள தகவல்களின் படி, 21,636 பேர் டெங்கு நோய்த்தாக்கதிற்கு உள்ளாகியுள்ளதுடன் 40 பேர் உயிர் இழந்துள்ளனர். இந்த உயிர் இழப்பு எண்ணிக்கையானது, 0.81 வீதத்திலிருந்து 0.25 வீதமாகக் குறைவடைந்துள்ளது.

கடந்த ஜனவரி மாதம் டெங்கு நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது 6,342ஆகப் பதியப்பட்டுள்ளது. டெங்குவினால் அதிகளவு பாதிக்கப்பட்ட மாவட்டமாக கொழும்பு மாவட்டம் காணப்படுகிறது. கொழும்பு மாவட்டத்தில் 6,947 பேரும் அதற்கு அடுத்தபடியாக கம்பஹா மாவட்டத்தில் 3,008 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

பொதுமக்கள் நுளம்புகள் பெரும் இடங்கள் தெடர்பில் அதிக கவனம் செலுத்தி நுளம்புகள் பெருகி வளரும் இடங்களை அழிப்பதுடன், சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பதில் கவனம் செலுத்த வேண்டும்.

சுற்றாடலைச் சுத்தமாக வைத்திருப்பதன் மூலம் டெங்கு ஆபத்துக்களை குறைக்க முடியுமெனவும் டெங்கு காய்ச்சலுக்கு உள்ளானோர் தாமதிக்காது அரச வைத்தியசாலைகளில் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டுமெனவும்  சுகாதார அமைச்சின் தொற்று நோய் தடுப்புப் பிரிவு பொதுமக்களுக்கு ஆலோசனையும் வழங்குகிறது.

டெங்குவினால் 40 பேர் பலி... Reviewed by Author on October 26, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.