ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்...
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டி 1984ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது. இதில் இருந்து 2 ஆண்டுகளுக்கு ஒரு முறை இந்தப்போட்டி நடைபெற்று வருகிறது.
இந்தியா, பாகிஸ்தான், பங்களாதேஷ், இலங்கை ஆகிய 4 நாடுகள் பெரும்பாலான போட்டிகளில் பங்கேற்று விளையாடி இருந்தன.
13ஆவது ஆசிய கிண்ணக் கிரிக்கெட் போட்டியை பங்களாதேஷ் நடத்துகிறது. சிங்கப்பூரில் நடந்த ஆசிய கிரிக்கெட் கவுன்சில் கூட்டத்தில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
அடுத்த ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி முதல் மார்ச் 6ஆம் திகதி வரை நடக்கிறது. பங்களாதேஷில் தொடர்ந்து 3ஆவது முறையாக ஆசிய கிண்ணப் போட்டி நடைபெறுகிறது. இந்த ஆசிய கிண்ணக் கிரிக்கெட் 20 ஓவர் முறையில் நடக்கிறது.
தற்போது முதல் முறையாக 20 ஓவர் முறையில் இப்போட்டி நடத்தப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஆசிய கிண்ணக் கிரிக்கெட் பங்களாதேஷில்...
Reviewed by Author
on
October 30, 2015
Rating:

No comments:
Post a Comment