இந்தியா படுதோல்வி : தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா...
ஐந்தாவது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் தென்னாபிரிக்கா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது. இதன் மூலம் ஒரு நாள் தொடரை 3–-2 என வென்றது.
இந்தியாவிற்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள தென்னாபிரிக்க அணிஇ 5 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்கேற்றது.
முதல்நான்கு போட்டிகளின் முடிவில் தொடர் 2–-2 என சமநிலையில் இருந்தது. ஐந்தாவது மற்றும் கடைசி போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்றது. இந்தப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற தென்னாபிரிக்க அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.
தென்னாபிரிக்க அணிக்கு கொக், அம்லா சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர். அம்லா 23 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அடுத்து களமிறங்கினார் டுபிௌசிஸ்.
இந்திய பந்துவீச்சை எளிதாக சமாளித்த இந்த இருவரும் சதம் விளாசினர். இந்நிலையில் 102 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார் கொக். அதன்பின் இணைந்த டுபிௌசிஸ், டிவிலியர்ஸ் ஜோடி அதிரடியாக ஓட்டக் குவிப்பில் ஈடுபட்டது.
இருவரும் மாறி மாறி பவுண்டரிகளாக விளாசினர். சதம் கடந்த டுபிௌசிஸ் 133 ஓட்டங்கள் பெற்றிருந்த வேளையில் காயம் காரணமாக 'ரிட்டையர்ட் ஹர்ட்' முறையில் வெளியேறினார்.
இந்திய பந்துவீச்சை சிதறடித்த டிவிலியர்ஸ் 119 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். இது இந்தத் தொடரில் டிவிலியர்ஸ் பெற்ற 3ஆவது சதமாகும். 50 ஓவர்கள் முடிவில் தென்னாபிரிக்கா 4 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 438 ஓட்டங்களை குவித்தது.
கடின இலக்கை விரட்டிய இந்திய அணி 36 ஓவர்களிலேயே 224 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுக்களையும் இழந்து படுதோல்வியடைந்தது.
இதன் மூலம் தென்னாபிரிக்கா 214 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன் மூலம் இந்திய மண்ணில் ஒருநாள் தொடரை முதல்முறையாக கைப்பற்றியுள்ளது தென்னாபிரிக்க அணி.
இந்த போட்டியில் இந்தியா தோல்வியடைந்ததன் மூலம் ஒருநாள் அரங்கில் தனது இரண்டாவது மோசமான தோல்வியை சந்தித்துள்ளது. இதற்கு முன் கடந்த 2000ஆம் ஆண்டு சார்ஜாவில் நடந்த இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி 245 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தது.
இந்திய அணியின் ரஹானே அதிகபட்சமாக 87 ஓட்டங்களும் தவான் 60 ஓட்டங்களும் எடுத்தனர்.
ஒரு நாள் அரங்கில் 3 ஆவது அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கைஇதுவாகும். முதலிடத்தில் இலங்கை, நெதர்லாந்திற்கு எதிராக பெற்ற 443 ஓட்டங்கள் இருக்கி றது.
வான்கடே மைதானத்தில் பெறப்பட்ட அதிகபட்ச ஓட்ட எண்ணிக்கையும் இதுவாகும்.தொடர் நாயகனாக டிவிலியர்ஸும், ஆட்ட நாயகனாக கொக்கும் தேர்வு செய்யப்
பட்டனர்.
இந்தியா படுதோல்வி : தொடரைக் கைப்பற்றியது தென்னாபிரிக்கா...
Reviewed by Author
on
October 26, 2015
Rating:

No comments:
Post a Comment