வடமாகாண விளையாட்டுப் போட்டியில் சாதனைகளை நிலை நாட்டிய சாதனையாளர்கள் கௌரவிப்பு.(படங்கள் இணைப்பு)
அமல உற்பவ கன்னி மரியாளின் சமூக மற்றும் கல்விப்பணிகளுக்கான அமைப்பின் ஏற்பாட்டில் இவ் வருடம் நடை பெற்ற வடமாகாண விளையாட்டுப் போட்டியில் புதிய சாதனைகளை நிகழ்த்திய மன்னார் கல்வி வலயத்திற்கு உற்பட்ட நானாட்டான் கல்வி கோட்ட மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இன்று(28) புதன் கிழமை காலை நானாட்டான் பிரதேசச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
அமல உற்பவ கன்னி மரியாளின் சமூக மற்றும் கல்விப்பணிகளுக்கான அமைப்பின் தலைவர் எஸ்.கொண்சன்டைஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த கௌரவிப்பு நிகழ்வின் போது நானாட்டான் பிரதேசச் செயலாளர் எம்.பரமதாசன் பிரதம விருந்தினராக கலந்து கொண்டார்.
இதன் போது சாதணையாளர்களான 8 மாணவ மாணவிகளுக்கு பெறுமதியான காலனிகள் (SPITES) வழங்கி வைக்கப்பட்டது.இதன் போது நூற்றுக்கனக்காணவர்கள் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் நிருபர்
(28-10-2015)
வடமாகாண விளையாட்டுப் போட்டியில் சாதனைகளை நிலை நாட்டிய சாதனையாளர்கள் கௌரவிப்பு.(படங்கள் இணைப்பு)
Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:

No comments:
Post a Comment