வவுனியா மேல் நீதிமன்றத் தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர் மீளாய்வு மனு
வவுனியா மேல் நீதிமன்றத்தால் கடந்த 20.07.2015 ஆம் திகதி வழங்கப்பட்ட வல்லுறவுக் குற்றச்சாட்டு தீர்ப்புக்கு எதிராக சட்டமா அதிபர், மேன் முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவைத் தாக்கல் செய்துள்ளார்.
தனது 11 வயதான சொந்த மகளை வல்லுறவுக்குட்படுத்திய குற்றத்துக்காக அவரது தந்தை கதிரவேல் கணேசமூர்த்தி என்வருக்கு எதிராக சட்டமா அதிபரால் வவுனியா மேல்நீதிமன்றத்தில் குற்றப்பத்திரம் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் எதிரி தன் மீதான குற்றச்சாட்டை ஏற்றுக்கொண்டிருந்தார்.
இச்சந்தர்ப்பத்தில் எதிர் சார்பில் முன்னிலையான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.சிற்றம்பலம் எதிரிக்கு நான்கு பிள்ளைகள் இருக்கின்றனர் எனவும் எதிரியே அந்தப் பிள்ளைகளை கவனித்து வருகிறார் எனவும் கூறி அவருக்கு ஒத்திவைக்கப்பட்ட சிறைத்தண்டனை வழங்கும்படி கூறினார்.
மாறாக, சொந்தப் பிள்ளையை வல்லுறவு செய்த தந்தைக்கு 15 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்க வேண்டுமென அரச சட்டவாதி நிஷாந் நாகரட்ணம் தனது வாதங்கள் முன்வைத்தார்.
இரண்டு வாதங்களையும் செவி மடுத்த மேல்நீதிமன்ற நீதிபதி அன்னலிங்கம் பிரேமச்சங்கர் எதிரிக்கு 10 வருடங்களுக்கு ஒத்திவைக்கப்பட்ட 2வருட சிறைத்தண்டனையும 50 ஆயிரம் ரூபா தண்டப்பணமும் செலுத்தத் தவறின் ஒரு வருட சாதாரண சிறைத்தண்டனையும், பாதிக்கப்பட்ட மகள் ஏற்கவிரும்பினால் ரூபா 2லட்சத்து 50ஆயிரம் நஷ்டஈடும் வழங்கவேண்டு மென தீர்ப்பு வழங்கியிருந்தார்.
மேற்படி குறித்த தீர்ப்பு சட்டத்துக்கு முரணானது என்றும் சட்ட வரையறைக்குள் உட்படவில்லை என்ற காரணங்களை முன்னிறுத்தி சட்டமா அதிபர் மேற்படி தீர்ப்பை ரத்துச் செய்து குற்றவாளிக்கு அதிக பட்ச தண்டனை வழங்கவேண்டுமெனக் கோரி மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் மீளாய்வு மனுவை கடந்தவாரம் தாக்கல் செய்துள்ளார்.

Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:

No comments:
Post a Comment