மன்னாரில் தொடர்ச்சியாக சட்ட விரோத மண் அகழ்வு-அசமந்த போக்குடன் அதிகாரிகள்
மன்னாரில் பல பாகங்களிலும் தொடர்ச்சியாக சட்டவிரோதமான முறையில் மண் அகழ்வு இடம் பெற்று வருகின்ற போதும் அதிகாரிகளும் பொலிஸாரும் அசமந்தப்போக்குடன் செயற்பட்டு வருவதாக மன்னார் மக்களும் புத்திஜீவிகளும் விசனம் தெரிவித்துள்ளனர்.
மன்னார் மற்றும் மாந்தை மேற்கு ஆகிய பிரதேச செயலாளர் பிரிவுகளிலே இவ்வாறு சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வு இடம் பெற்று வருகின்றது.
இதற்கு பிரதேச செயலாளர்கள் உடந்தையாக செயற்படுவதாகவும் விசனம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தென் பகுதியைச் சேர்ந்த நபர் ஒருவர் மன்னார் மற்றும் மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவுகளில் சட்ட விரோதமான முறையில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
குறிப்பாக மாந்தை மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் நீண்ட காலம் மணல் அகழ்வில் ஈடுபட்ட குறித்த நபர் தற்போது மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவில் உள்ள பல்வேறு இடங்களில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
மன்னார் பிரதேசச் செயலாளரின் ஆதரவுடனும் பொலிஸாரின் உதவியுடனும் குறித்த தென்பகுதியைச் சேர்ந்த நபர் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
சிறிது காலம் மன்னார் பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட நாகதாழ்வு, திருக்கேதீஸ்வரம் ஆகிய பகுதிகளில் மண் அகழ்வில் ஈடுபட்டு வந்தார்.
இச்சம்பவம் தொடர்பில் மக்களும் புத்திஜீவிகளும் மன்னார் பிரதேசச் செயலாளர் மற்றும் மன்னார் பொலிஸாருக்கும் பல தடவைகள் கவனத்தில் கொண்டு வந்தும் அவர்கள் அசமந்தப்போக்குடன் நடந்து கொண்டதோடு எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளவில்லை.
தற்போது குறித்த நபர் மன்னார் தீவுப்பகுதியில் உள்ள பல்வேறு இடங்களில் மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
இவர் பலருடைய பெயர்களில் மண் அகழ்வதற்கான அனுமதியை மன்னார் பிரதேசச் செயலாளரினூடாக பெற்றுக்கொண்டு மண் அகழ்வில் ஈடுபட்டு வருகின்றார்.
இவருக்கு மன்னாரில் உள்ள சில டிப்பர் வாகன உரிமையாளர்கள் ஆதரவு வழங்குவதோடு, அரசியல் வாதி ஒருவரும் மறைமுகமாக ஆதரவு வழங்கி வருவதாக மன்னார் மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
எனவே மன்னார் மாவட்டத்தில் அனுமதிப் பத்திரத்தை வைத்துக்கொண்டு மண் அகழ்வு செய்ய முடியாத நிலையில் பலர் உள்ள போதும், தென் பகுதியைச் சேர்ந்த குறித்த நபர் அரசியல்,
அதிகாரிகள் மற்றும் பொலிஸாரின் ஆதரவுடன் மண் அகழ்வில் ஈடுபட்டு வருவதை தடுக்க யார் முன் வருவார்கள் என மன்னார் மக்களும்,புத்தி ஜீவிகளும் கேல்வி எழுப்பியுள்ளனர்.

Reviewed by NEWMANNAR
on
October 29, 2015
Rating:

No comments:
Post a Comment