செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடம்....
2015 ஆம் ஆண்டின் செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடத்தைப் பிடித்துள்ளதாக லண்டனை தலைமையகமாகக் கொண்ட லெகாடெம் நிறுவகம் இந்த தகவலை வெளியிட்டுள்ளது.
நாடுகளின் மக்களின் வருவாய் என்பவற்றுடன் 8 துறைகளான பொருளாதாரம், நிர்வாகம், கல்வி, சுகாதாரம், கைத்தொழில் வாய்ப்புக்கள், பாதுகாப்பு, தனிப்பட்ட சுதந்திரம் மற்றும் சமூக முதலீடு என்பவற்றின் தரவுகளை கொண்டு இந்த பட்டியல் தயார் செய்யப்படுகிறது.
142 நாடுகளில் சேகரிக்கப்பட்ட தரவுகளின் படி நோர்வே தொடர்ந்தும் 7வது வருடமாக செழுமைமிக்க நாடுகளில் முதல் இடத்தை பெற்றுவருகின்றது.
இதேவேளை நேபாளம் 89வது இடத்திலும், இந்தியா 99வது இடத்திலும், பங்களாதேஸ் 103வது இடத்திலும், பாகிஸ்தான் 130வது இடத்திலும் ஆப்கானிஸ்தான் 141வது இடத்திலும் உள்ளது.
செழுமைமிக்க நாடுகளில் இலங்கை 61 ஆவது இடம்....
Reviewed by Author
on
November 04, 2015
Rating:

No comments:
Post a Comment