மன்னார் சன்னார் பகுதியில் 4000 ஏக்கர் காணிகளை சட்டரீதியாக பெற்றுகொள்ள இராணுவம் முயற்சி
சன்னார் பகுதியில் இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கபட்டுள்ள 4ஆயிரம் ஏக்கர் காணியிணை கைப்பற்றுவதற்கு இராணுவம் முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.
முன்னைய அரசாங்கத்தின் காலத்தில் வட மாகாணத்தில் பல்லாயிரம் ஏக்கர் காணிகள் அரச படைகளால் கையகபடுத்தபட்டிருந்தது.
இந்நிலையில் மாந்தைமேற்கு சன்னார் பகுதியில் இராணுவத்தின் கட்டுபாடடின் கீழ் 4 ஆயிரம் ஏக்கர் காணிகள் முடக்கபட்டிருந்தன இதில் கேயில் குளம், சவேரியார்புரம் உட்பட பல கிரமங்களின் குளங்கள் உள்வாங்கபட்டுள்ளது.
கடந்த ஜனவரி 8ம் திகதிக்கு பின் நல்லாட்சி என்று கூறிகொண்ட அரசு இராணுவம் பிடித்த காணிகளை மீண்டும் மக்களிடம் கையழிக்க நடவடிக்கையினை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கபட்டநிலையில் அது தவுடுபொடியாகும் நிலை மன்னாரில் ஏற்பட்டுள்ளது.
குறித்த சன்னார் பகுதியில் உள்ள 4 ஆயிரம் ஏக்கர் காணிகளை இராணுவம் சட்டரீதியாக பெற்றுகொள்வதற்கு கடும் பிரயத்தனம் எடுப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
மன்னார் சன்னார் பகுதியில் 4000 ஏக்கர் காணிகளை சட்டரீதியாக பெற்றுகொள்ள இராணுவம் முயற்சி
Reviewed by NEWMANNAR
on
November 03, 2015
Rating:

No comments:
Post a Comment