சிற்பி ஓவியன் நாட்டுப்பற்றாளன் கட்டிடக்கலைஞன் என பன்முக ஆளுமையின் மையம் வாழ்ந்து மறைந்த மறையாத மாணிக்கம் மன்னார் மாவட்டத்தின் முதலாவது சிற்பி யக்கோ அவுறான் லியோ-Photos
மன்னார் விம்பம் ஊடாக சிற்பி ஓவியன் நாட்டுப்பற்றாளன் கட்டிடக்கலைஞன் என பன்முக ஆளுமையின் மையம் வாழ்ந்து மறைந்த மறையாத மாணிக்கம் மன்னார் மாவட்டத்தின் முதலாவது சிற்பி யக்கோ அவுறான் லியோ
அவர்களைப்பற்றிய அவரின் உயிர்மூச்சு உள்ள வரை சிற்பக்கலைக்காக உழைத்த உன்னதரின் நினைவு தொகுப்பு இது…
இவரைப்பற்றி
யக்கோ அவுறான் சூசானா அனேஸ்த்திரி தம்பதியினருக்கு மகனாக 08-12-1912 பிறந்த லியோ அவர்களின் தொந்த இடமாக குருநகர் யாழ்ப்பணம் தனது கலைப்பயணத்தினை சிறுவயது முதலே மன்னார் பனங்கட்டிக்கொட்டினை தளமாக கொண்டு அருங்கலைப்படைப்பினை படைத்தார் மனைவி மார்க்கிறேற் பிள்ளைகளுடன் கலைப்படைப்புக்காகவே தன்னை இணைத்துக்கொண்டார் சிற்பக்கலையின் கைதேர்ந்த லியோ அவர்களின் கைவண்ணத்தில் உயிரோட்டம் இருப்பதை உணர்ந்த பலரும் இவரது தெய்வீக கiலாற்றலை விரும்பி வாங்கவும் ஏற்றுக்கொள்ளவும் முனைந்தனர் கலைவண்ணம் கைவண்ணமாகி இலங்கையின் எப்பாகத்திலும் மின்னும் அளவிற்கு எண்ணம் கொண்டார்…
இவரது படைப்புக்கள் இருக்கும் பல இடங்களில் சில இடங்கள் இதோ
மன்னார்-மட்டக்களப்பு- யாழ்ப்பாணம்- திருகோணமலை-வவுனியா அம்பாறை இரத்தினபுரி கொழும்பு கற்பிட்டி தலவில வென்னப்புவ போன்ற இடங்களிலும் இன்னும் பல இடங்கள்…..
ஒரு சிற்பிக்கு இருக்கவேண்டிய சிறப்பம்சங்கள் எவையென இவர் எழுதி வைத்துள்ள விடையம்
சிற்பக்கலையானது ஒரு அற்புதக் கலை அது புனிதமானதும் புனிதத்தன்மையுடைய மூன்று அம்சங்கள் அடங்கியுள்ளது.
பொறுமை---மனதை ஒருநிரலப்படுத்தல்---நம்பிக்கை இவைமூன்றும் ஒரு சிற்பக்கலைஞனுக்கு இருக்கவேண்டிய சிறப்பான அம்சங்களாகும்
இவரால் பிரதானமாக செய்யப்பட்ட சிலைகள் சுரூவங்களானவை
ஆந்தோனியார்
லூர்து மாதா
இருதயநாதர்
உத்திரிய மாதா
புனித சூசையப்பர்
தேவமாதா
சவேரியார்
பிலிப்பு நேரியர்
மடு மாதா
கிறிஸ்த்துராசா
கப்பலேந்தி மாதா
இயேசு பாடுகள் -12
புனித பவுல்
புனித பேதுரு
புனித செபஸ்தியார் போன்றன பெரும்பாலும் கிறிஸ்த்தவ சுருவங்களாகவே இருந்தன
இவர் தனது சிற்பவேலைப்பாடுகளை செய்யப்பயன் படுத்தும் பொருட்கள்
மரத்திலும்
கற்களிலும் சீமெந்து-மண் கலவை
பிளாஸ்ரிக்கிலும்
இவர் செதுக்கிய புகழ் பெற்ற தேசியத்தலைவர்கள் சிலர்
மன்னார் பொது நூலகத்தின் முன்னாள் அமைந்திருக்கும் தமிழ்த்தாயின் புதல்வன் தந்தை செல்வா அவர்களின் சிலையோடு
யாழ்ப்பாணத்தின் புத்திஜீவிகளின் ஒருவரான ஜீ.ஜீ.பொன்னம்பலம் சிலையும்
லோங் சுவாமியார் சிலையும்
முன்னாள் பிரதமரான சிறிமாவோ பண்டாரநாயக்க
முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்க
முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜெயவர்த்தன இவ்வாறு சொல்லிக்கொண்டே போகலாம்…..
இவரால் செய்யப்பட்ட பிரதானமான சிலைகளும் சுருவங்களும்
1950 வண.அலெக்ஸாண்டர் சுவாமி காலத்தில் மட்டக்களப்பு செங்கலடி தன்னாமுனை கோவிலுக்கு புனித பவுல் புனித பேதுரு புனித செபஸ்தியார் சுருவங்களோடு மட்டக்களப்பில் இருக்கும் அனைத்து கோவில்களுக்கும் சருவங்களும் சிலைகளும் இவரது கைவண்ணத்தில் தான் அமைந்துள்ளது.
வண பிதா மருசிலின் சுவாமி காலத்தில் சிலாவத்தை கட்டைக்காடு எனும் இடத்திற்கு பத்திமா மாதா சுருபமும் பண்டாரவளை மடத்திற்கு பல வகையான சுருவங்களும்.
N.குரூஸ் சுவாமியார் காலப்பகுதியில் வெண்ணப்புவ மடத்திற்கு திருக்குடும்ப சுரூபமும் திரேசம்மாள் சுரூபமும் இன்னும் பல…
வணபிதா து.கோமஸ் சுவாமியார் காலத்தில் 1951 ம் ஆண்டு மன்னார் புனித செபஸ்த்தியார் கோவிலில் உள்ள 12 அடி மரத்திலாலான புனித செபஸ்தியார் சுரூபம் பழுதடைந்ததால் பிளாஸ்ட பரிசினால் அதேவடிவ அமைப்பில் புதிய சுரூபமும்.
1951 ம் ஆண்டில் யாழ்ப்பாணம் பண்டத்தரிப்பில் ஞான ஒடுக்கச்சாலைக்கு பல சுரூபங்கள் செய்து கொடுத்துள்ளார்…
வணபிதா றொபேட் பெனாண்டோ சுவாமி காலப்பகுதியில் இருதயஆண்டவர்-சம்மனசு – மாதா சுருவங்களும் கொழும்பு செக்கட்டித்தெருவில் உள்ள கோவிலுக்கு சுருவங்களும் மகேன எனும் இடத்தில் அமைந்த கோயிலுக்கும் பல..
கற்பிட்டில் உள்ள தலவில சந்தனமாதா கோவிலுக்கு ஐந்து அடி உயரம் கொண்ட சிலுவைப்பாதைகள் சந்தன மாதா உருவமும்…
மட்டக்களப்பு கன்னியர் வளாகத்தினுள் அமைந்திருக்கும் ஐந்து அடி உயரம் கொண்ட சிலுவைப்பாதைகள் அத்தோடு…
மன்னார் பேசாலையில் சுவாமி ஞானப்பிரகாசியார் சிலையும் தாழ்வுபாட்டில் வணபிதா சேப்கா சுவாமி சிலையும் பல…
தலைமன்னார் புனித லோறன்சியார் கோவிலுக்கு வணபிதா அலோசியஸ் காலப்பகுதியிலும் சிலாவத்துறையில் புனித சவேரியார் கோயிலுக்கு வணபிதா ஓல்பன் இராஐசிங்கம் காலப்பகுதியிலும் யாழ்ப்பாணம் நாவாந்துறை புனித நீக்கிலாஸ் கோவிலுக்கும் (அறைந்து இறக்கும் பாஸ் காட்சி) கத்தர் சுருபம் மரத்தால் செய்து கொடுத்துள்ளார்…
மடுத்திருப்பதியின் புனித வரவேற்பு மாதா சுரூபத்தினையும் மன்னார் தோட்டவெளியில் சங்கிலி அரசனால் மக்கள் வெட்டப்பட்ட காடசியமைப்பையும் செய்து கொடுத்துள்ளார் (இப்பொழுது வேதசாட்சிகளின் இராக்கினி ஆலய நுழைவாயிலில் இருப்பதைக்காணலாம்)
சிற்பக்கலையோடு ஓவியத்திலும் அதே நேரம் கட்டிடக்கலையில் மிகவும் தேர்ச்சி பெற்றிருந்ததற்கு சான்றாக இவரது கட்டிடக்கலையுடன் சிறப்பானவிடையமாக…
பரம்பரையாக வந்த கலைப்பாரம்பரியமானவரன லியோ அவர்களின் கட்டிடக்கலையின் உச்சமாக 1953 ஆண்டு மன்னார் பள்ளிமுனையில் வீற்றிருக்கும் புனித லூசியா அன்னையின் ஆலய முகப்பு கட்டிடத்தை சித்திர வேலைப்பாடுகளுடன் கட்டி முடித்து ஆலயத்தின் இருபக்கமும் முகப்பின் மேல் பக்கமும் சிற்பங்கள் செய்தும் வெளிப்படுத்தினார் அது மட்டுமல்லாது இவரது உரிமைக்கோவிலான
யாழ் குருநகர் புனித சந்தியோகுமையர் ஆலயத்தில் சிற்பவேலைகளும்
1981ம் ஆண்டு வணபிதா பயஸ் சுவாமி பங்குத்தந்தையாக இருந்த போது போட்டிக்கோவும் 80 அடி மணிக்கூட்டுக்கோபுரமும் ஒரு துண்டுக்கம்பியும் இல்லாமல் தனியான முட்டுக்களால் அமைத்துக்கொடுத்துள்ளார் மேலும் வங்காலையில் புனித ஆனாள் ஆலயத்தில் கெபி கட்டி சிற்ப வேலைகளுடன் அமைத்து சூசையப்பர் மரணித்த சுரூபங்களும் செய்து கொடுத்துள்ளார் இன்னும் இவரது படைப்புக்கள் ஏராளம் கிடைத்தவை மட்டுமே இவை…
இவரின் சிற்பக்கலையின் உச்சமாகவும் அங்கீகாரமாகவும் உள்ள சம்பவம் என்றால்
வவுனியா செட்டிகுளத்தில் 23-03-1979ம் ஆண்டு வணபிதா.ஜேம்ஸ் பத்திநாதர் பங்குத்தந்தையாக இருந்த காலப்பகுதியில் புனித அந்தோனியாரின் புதிய ஆலயத்தினை திருநிலைப்படுத்துவதற்கான தேவைக்காக ஆறு அடி உயரமுள்ள பாடுபட்ட இயேசு சுரூபம் செய்து கொண்டு இருக்கையில் அவ்வாலயத்திற்கு வருகை தந்த பாப்பரசரின் பிரதிநிதி அதிவந்தணைக்குரிய ஆயர் நிக்கலோ றெட்றுன்னே ஆண்டகை அச்சுரூபத்தில் தொய்வீக புனிதத்தன்மை இருப்பதைக்கண்டு சிற்பியான ய.அ.லியோவுக்கு வெள்ளிப்பதக்கமும் நினைவுச்சின்னமும் வழங்கி வாழ்த்தி ஆசீர்வதித்தார் இதுவே இவரது வாழ்வில் இவர் அளவிடமுடியாத அளவிற்கு மகிழ்ச்சியான சம்பவமாக உள்ளது.
மன்னாரின் முதன்மையானவர் இவர்
மன்னாரின் பெருமையான ய.அ.லியோ அவர்கள் 10000 இற்கும் மேற்பட்ட சுருவங்களை சிலைகளை ஓவியங்களை தனது 60 வருட கலைப்பயணத்தின் சொத்தாக தந்து விட்டு 05-09-1986ல் மன்னார் மண்ணிலே வித்தானார்…
மன்னார் இணையத்தின் தேடலில் கிடைக்கப்பெற்ற மன்னாரின் பொக்கிஷமான ய.அ.லியோ அவர்களின் வாழ்க்கையினை தொகுத்தபோது மன்னார் பிரதேச இலக்கியவிழாவில் இக்கலைஞனின் பெயரை கலையரங்கிற்கு சூட்டிக்கொண்டது.கௌரவமானதும் கடமைப்பாடுடையதுமான செயலில் இறங்கியுள்ளது மன்னார் இணையம்
நிலையில்லா வாழ்வினிலே
கலையுணர்வும் தெய்வீகத்தன்மையும்
நிறைந்த சிலைகளும-செய்து
நிலையாக எம் நினைவுகளில் வாழும்
ய.அ.லியோ அவர்களின் புகழ் வாழ்க…
குறிப்பு- இவரது காலத்தில் இவரால் வரையப்பட்ட எழுதிய ஓவியங்கள் கடிதங்கள் சிலைகள் இன்னும் ஆவணமாக உள்ளது உங்கள் பார்வைக்கு கிடைக்கப்பெற்றவையினை நிழற்படங்களாக தந்துத்ளோம் ,,
நியூ மன்னார் இணையத்திற்காக…
வை-கஜேந்திரன்
சிற்பி ஓவியன் நாட்டுப்பற்றாளன் கட்டிடக்கலைஞன் என பன்முக ஆளுமையின் மையம் வாழ்ந்து மறைந்த மறையாத மாணிக்கம் மன்னார் மாவட்டத்தின் முதலாவது சிற்பி யக்கோ அவுறான் லியோ-Photos
Reviewed by NEWMANNAR
on
November 03, 2015
Rating:
No comments:
Post a Comment