றக்பி உலகக் கிண்ண சம்பியனானது நியூஸிலாந்து...
றக்பி உலகக் கிண்ணத்தை மூன்றாவது முறையாக தனதாக்கிக்கொண்டது நியூஸிலாந்து அணி.
2015ஆம் ஆண்டுக்கா றக்பி உலகக் கிண்ணப்போட்டியின் இறுதிப்போட்டியில் அவுஸ்திரேலியாவுடன் மோதிய நியூஸிலாந்து அணி, 34 -– 17 என்ற கணக்கில் அவுஸ்திரேலியாவை வீழ்த்தி சம்பியன் பட்டத்தை வெற்றிகொண்டது.
2015ஆம் ஆண்டு றக்பி உலகக் கிண்ணம் இங்கிலாந்தில் நடைபெற்றது. இதில் மொத்தம் 20 நாடுகள் பங்குபற்றின. இந்தப்போட்டி கடந்த செப்டெம்பர் மாதம் ஆரம்பமாகி நேற்றுமுன்தினம் சனிக்கிழமை இதன் இறுதிப்போட்டி நடைபெற்றது.
இந்தப் போட்டியில் நடப்புச் சம்பியனான நியூஸிலாந்தும், முன்னாள் சம்பியனான அவுஸ்திரேலியாவும் பலப்பரீட்சை நடத்தின. இதில் 34 -– 17 என்ற புள்ளிகள் அடிப்படையில் நடப்பு சம்பியனான நியூஸிலாந்து வெற்றிபெற்று 2015ஆம் ஆண்டுக்கான றக்பி சம்பியன் என்ற பட்டத்தையும் தனதாக்கிக் கொண்டது.
அதேவேளை இவ்விரு அணிகளும் றக்பி உலகக் கிண்ண இறுதிப்போட்டியில் மோதியது இதுவே முதல் முறையாகும். அதேவேளை நியூஸிலாந்து அணி றக்பி உலக கிண்ணத்தைக் கைப்பற்றுவது இது மூன்றாவது சந்தர்ப்பமாகும். இதற்குமுன் 1987 மற்றும் 2011ஆம் ஆண்டுகளில் றக்பி சம்பியன் பட்டத்தை வென்றிருக்கின்றது.
அதேவேளை றக்பி உலகக் கிண்ணத் தொடரை அடுத்தடுத்து இரண்டு தடவைகள் கைப்பற்றிய முதல் அணி என்ற சாதனையையும் நியூஸிலாந்து பதிவுசெய்துள்ளது.
இதேவேளை றக்பி உலகக் கிண்ணத்தின் மூன்றாவது இடத்திற்கான போட்டியில் ஆர்ஜன்டீனா –- தென்னாபிரிக்க அணிகள் மோதின. இதில் தென்னாபிரிக்கா வெற்றிபெற்று மூன்றாவது இடத்தைப் பிடித்துக்கொண்டமை குறிப்பிடத்தக்கது.
றக்பி உலகக் கிண்ண சம்பியனானது நியூஸிலாந்து...
Reviewed by Author
on
November 02, 2015
Rating:

No comments:
Post a Comment