மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு-உள்ளூர் உற்பத்திகளும் பாதிப்பு.-Photos
தம்புள்ளை மத்திய மரக்கறி விற்பனை சந்தையில்; மரக்கறி வகைகளின் விலை அதிகரித்துள்ளதன் காரணமாக மன்னார் மாவட்டத்திலும் மரக்கறி வகைகளின் விலை அதிகரித்துள்ளதாக வியாபாரிகள் தெரிவித்துள்ளனர்.
தற்போது தென் பகுதியில் பெய்து வரும் கடும் மழையின் காரணமாக தம்புள்ளை பகுதியில் உற்பத்தி செய்யப்பட்டுள்ள மரக்கறி வகைகள் சேதமடைந்துள்ளது.இதனால் மிகுதி மரக்கறி வகைகளே தம்புள்ள மத்திய மரக்கறி விற்பனை சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இதனால் இங்கு மரக்கறி வகைகளின் விலை அதிகரித்துள்ளது.இதே வேலை உள்ளூர் மரக்கறி உற்பத்திக்கு தேவையான நீர் கிடைக்காத நிலையிலும் தற்போது பெய்த கடும் மழையின் காரணமாகவும் உள்ளுர் உற்பத்திகள் முற்றாக பாதீப்படைந்துள்ளது.
இதனால் தம்புள்ளை மத்திய மரக்கறி விற்பனை சந்தையில் கொள்வனவு செய்யப்பட்டு வரும் மரக்கறி வகைகள் தற்போது சற்று கூடிய விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருகின்றது.
இந்த வகையில் இன்று(7) சனிக்கிழமை மன்னாரில் உள்ள மரக்கறி விற்பனை நிலையங்களில் 1 கிலோ கரட்-200 ரூபாவிற்கும்,1 கிலோ லீக்ஸ்-120 ரூபாவிற்கும்,1 கிலோ பச்சை மிளகாய்-600 ரூபாவிற்கும்,1 கிலோ சின்ன வெங்காயம்-160 ரூபாவிற்கும்,1 கிலோ பெரிய வெங்காயம்-150 ரூபாவிற்கும்,1 கிலோ உருளைக்கிழங்கு-120 ரூபாவிற்கும்,1 கிலோ கோவா-140 ரூபாவிற்கும்,1 கிலோ தக்காளி-160 ரூபாவிற்கும்,1 கிலோ போஞ்சி-240 ரூபாவிற்கும்,1 கிலோ கத்தரிக்காய்-100 ரூபாய் முதல் 120 ரூபாய் வரைக்கும்,1 கிலோ கறி மிளகாய்-240 ரூபாவிற்கும் சற்று அதிகரித்த விலைக்கு விற்பனை செய்யப்பட்டு வருவதாக விற்பனையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மன்னாரில் மரக்கறி வகைகளின் விலை அதிகரிப்பு-உள்ளூர் உற்பத்திகளும் பாதிப்பு.-Photos
Reviewed by NEWMANNAR
on
November 07, 2015
Rating:
No comments:
Post a Comment