மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயரில் உடல் நலம் குறித்து அருட்தந்தையர்களிடம்ம் நலம் விசாரித்த வடமாகாண ஆளுனர். Avatar
மன்னாரிற்கு வருகை தந்த வட மாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்காரவிற்கும் மன்னார் மறை மாவட்ட குருமுதல்வர் அருட்தந்தை அன்ரனி ஏ.விக்டர் சோசை அடிகளாரிற்கும் இடையில் இன்று திங்கட்கிழமை(23) மதியம் மன்னார் ஆயர் இல்லத்தில் விசேட சந்திப்பு இடம் பெற்றது.
மன்னார் மாவட்ட அபிவிருத்தி மீளாய்வு கூட்டம் வடமாகாண ஆளுனர் எச்.எம்.ஜி.எஸ்.பலிக்கார தலைமையில் இன்று (23) திங்கட்கிழமை காலை 9.30 மணியளவில் மன்னார் மாவட்டச் செயலகத்தின் கேட்போர் கூடத்தில் இடம் பெற்றது.
-இதனைத் தொடர்ந்து வடமாகாண ஆளுனர் இன்று (23) மதியம் மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று மன்னார் மறை மாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி ஏ.விக்டர் சோசை மற்றும் மன்னார் மறைமாவட்ட ஆயரின் செயலாளர் அருட்தந்தை ஏ.முரளிதரன் அவர்களுடனும் கலந்தரையாடினார்.
இதன் போது சிங்கப்பூர் மருத்துவமனையில் சிகிச்சசை பெற்று வரும் மன்னார் மறைமாவட்ட ஆயர் இராயப்பு ஜோசேப்பு ஆண்டகை அவர்களின் தற்போதைய உடல் நலம் குறித்தும் அருட் தந்தையர்களுடன் வடமாகாண ஆளுனர் கலந்துரையாடியுள்ளார்.
இதன் போது அருட்தந்தையர்கள் சிலரும் கலந்து கொண்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
மன்னார் ஆயர் இல்லத்திற்குச் சென்று ஆயரில் உடல் நலம் குறித்து அருட்தந்தையர்களிடம்ம் நலம்
விசாரித்த வடமாகாண ஆளுனர். Avatar
Reviewed by Admin
on
November 23, 2015
Rating:

No comments:
Post a Comment