போராட்டக் குணத்தை மீண்டும் தமிழரிடையே அரசு திணிக்கக்கூடாது: சி.சிவமோகன் எம்.பி....
போராட்டக் குணத்தை மீண்டும் தமிழரிடையே அரசு திணிக்கக் கூடாது என வன்னி மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சி.சிவமோகன் தெரிவித்துள்ளார்.
நேற்று இடம்பெற்ற ஙர்த்தால் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அதில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
இன்று அரசியல் கைதிகள் விடயம் வேறு கோணங்களில் பார்க்கப்படுவது அரசின் தவறான விடயமாகும்.
மேற்படி விடயத்தில் வெள்ளிக்கிழமை வடகிழக்கு மாகாணம் தழுவிய பொது கடையடைப்பு, ஹர்த்தாலுக்கு தாமாகவே பொது மக்கள், அமைப்புக்கள் முன்வந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
அரசு இப்படியான செயல்பாடுகள் மூலம் போராட்ட குணத்தை மீண்டும் தமிழரிடையே திணிக்கக்கூடாது. 2009 யுத்த முடிவின் பின்னும் அரச பயங்கரவாத அடக்குமுறையில் சிக்குண்ட தமிழ் மக்கள் மீழ வழியின்றி மைத்திரி அரசை முழுமையாக தேர்தலில் ஆதரவளித்து வெற்றி பெற செய்தனர்.
இன்று நல்லாட்சி அரசு திசைமாறி போகிறதா என்ற கேள்வி தமிழ் மக்கிடையே பேசுபொருளாகியுள்ளது.
தமது பேரினவாத சிந்தனைகளில் இருந்து மாறி மாறி வரும் சிங்கள அரசுகள் மாறவில்லை எனின் நல்லிணக்கம் என்பது எப்படி சாத்தியமாகும்.
நடைபெற்ற 2009 இறுதி யுத்தத்தில் மனித பேரவலம் வரலாற்றில் தமிழர்கள் மறக்கக்கூடியதல்ல.
இலங்கை அரசு பொறுப்பு கூறல் உண்மைகளை கண்டறிந்து அரசியல் தீர்வை காணுதல் மூலம் தமிழர்களை சாந்தப்படுத்தி ஒற்றையாட்சிக்குள் சுயகௌரவம், சுயபாதுகாப்பு, அனைவருக்கும் சமஉரிமை, சுயபொருளாதார அபிவிருத்தி, சுயநில உரித்துடமை, போன்றவற்றை உறுதிப்படுத்துவதன் மூலம்,
நிரந்தர அபிவிருத்தி அடையலாம் என ஐ.நா.தீர்மானங்கள் மூலம் வெளிப்படுத்தி வருகின்றபோதும் இந்த அரசு கடந்த வரலாறுகளை மறந்து மீண்டும் தமிழரிடையே போராட்ட குணத்தை வளர்த்து வருகிறது.
இவை அனைத்தையும் நிறுத்தி மைத்திரி அரசு உடன் அரசியல் கைதிகளை விடுவித்து தேசிய அரசியல் அபிலாசைக்குள் தமிழினத்தையும் உள்ளீர்க்க முன்வரவேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
போராட்டக் குணத்தை மீண்டும் தமிழரிடையே அரசு திணிக்கக்கூடாது: சி.சிவமோகன் எம்.பி....
Reviewed by Author
on
November 14, 2015
Rating:
Reviewed by Author
on
November 14, 2015
Rating:


No comments:
Post a Comment