சிரியா அகதிகளுக்கு உதவ பிறந்த நாளையே அர்ப்பணித்த 7 வயது சிறுமி: கனடாவில் ஒரு உருக்கமான சம்பவம் ...
கனடா நாட்டிற்கு வந்துள்ள சிரியா அகதிகளுக்கு உதவும் வகையில் தன்னுடைய பிறந்த நாளையே அர்ப்பணித்துள்ள 7 வயது சிறுமியின் கருணை குணம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஓண்டாரியோ மாகாணத்தில் உள்ள பாரீஸ் நகரில் Abigail MacDonald என்ற பெயருடைய 7 வயது சிறுமி தனது பெற்றோர்களுடன் வசித்து வந்துள்ளார்.
சில தினங்களுக்கு முன்னர் சிறுமியின் பெற்றோர் சிரியா அகதிகளின் பரிதாப நிலையை குறித்து பேசிக்கொண்டு இருந்ததை கேட்ட அந்த சிறுமிக்கு சிரியா அகதிகளுக்கு உதவ வேண்டும் என தோன்றியுள்ளது.
பின்னர், சிரியா அகதிகள் கனடாவிற்கு வரவுள்ளதை அறிந்த சிறுமி அவர்களுக்கு நிதி திரட்டும் முயற்சியில் இறங்கியுள்ளார்.
சில தினங்களில் தனது 7-வது பிறந்த நாள் வருவதை அறிந்த அந்த சிறுமி, பிறந்த நாள் அன்று தனக்கு பரிசுகள் வருவதை விட அதை வேறு விதமாக பயன்படுத்த திட்டமிட்டுள்ளார்.
தனது பிறந்த நாள் அன்று தனது வீட்டிற்கு முன்னால் சிறிய சொக்லேட் கடையை திறக்க இருப்பதாகவும், அதன் மூலம் கிடைக்கும் பணத்தை சிரியா அகதிகளுக்கு வழங்கவும் அவர் முடிவு செய்துள்ளார்.
பின்னர் பிறந்த நாள் அழைப்பிதழை எடுத்துக்கொண்டு தாயாருடன் ஒவ்வொரு வீடாக சென்று கொடுத்துள்ளார்.
பிறந்த நாள் அன்று சிறுமி எதிர்ப்பார்த்தது போலவே அவரது சிறிய கடைக்கு ஏராளமான நபர்கள் வந்து சொக்லேட் வாங்கி சென்றுள்ளனர்.
கடையை திறந்த ஒரே நாளில் சிறுமி 1,800 டொலர்களை விற்பனை மூலம் ஈட்டியுள்ளார்.
உள்ளூரில் இருக்கும் தேவாலயம் ஒன்று சிரியா அகதிகளுக்காக 30,000 டொலர் வரை நன்கொடை வசூலித்து வருவதால், அந்த தேவாலயத்திடம் இந்த தொகையை சிறுமி வழங்கியுள்ளார்.
இது குறித்து பேசிய அந்த சிறுமி, ‘கடும் யுத்தங்களுக்கு மத்தியில் வீடு, உடமைகளை விட்டு வந்துள்ள சிரியா அகதிகளுக்கு ஏதாவது உதவ வேண்டும் என நினைத்தேன்.
தனது விருப்பம் தற்போது நிறைவேறி இருப்பதை நினைத்தால் மிகவும் மகிழ்ச்சியாக உள்ளதாக அந்த சிறுமி உற்சாகத்துடன் தெரிவித்துள்ளார்.
சிரியா அகதிகளுக்கு உதவ பிறந்த நாளையே அர்ப்பணித்த 7 வயது சிறுமி: கனடாவில் ஒரு உருக்கமான சம்பவம் ...
Reviewed by Author
on
December 15, 2015
Rating:

No comments:
Post a Comment