அண்மைய செய்திகள்

recent
-

”கடவுள் விரைவில் உங்களை அழிப்பார்”: சிரியா ஜனாதிபதியை கடுமையாக சாடிய குழந்தைகள்...


சிரியாவில் கொடுங்கோல் ஆட்சி செய்துவரும் ஜனாதிபதியை கடவுள் விரைவில் அழிப்பார் என வறுமையில் வாடி வரும் அந்நாட்டு குழந்தைகள் கடுமையாக சாடியுள்ள வீடியோ வெளியாகியுள்ளது.
சிரியாவில் கடந்த 2011ம் ஆண்டு முதல் அரசாங்கத்திற்கும், அந்நாட்டில் உள்ள போராளிகளுக்கும் இடையே உள்நாட்டு போர் நடைபெற்று வருகிறது.

சிரியா ஜனாதிபதியான பஷார் அல்-அசாத்தை பதவி விலகி கோரி போராளிகள் மட்டுமன்றி, உள்நாட்டு மக்களும் போராடி வருகின்றனர்.

இந்நிலையில், Eastern Ghouta பகுதியில் வசிக்கும் 6 முதல் 7 வயதுள்ள குழந்தைகள் ஜனாதிபதியை கடுமையாக சாடியுள்ள வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சிறுமி ஒருவர் பேசுகையில், ‘ஜனாதிபதியே, உங்களுக்கு பசி என்றால் என்னவென்று தெரியுமா…? அதை எப்போதாவது உணர்ந்து இருக்கிறீர்களா..?

ஆனால், இங்கு நாங்கள் தினந்தோறும் பசியோடு தான் வசித்து வருகிறோம். பசியால் எத்தனை குழந்தைகள் இங்கு இறக்கிறார்கள் என உங்களுக்கு தெரியுமா..?

சரியான உணவு இல்லாமல் அசுத்துமான தண்ணீரையும், அழுகிப்போன ரொட்டி துண்டுகளை தான் நாங்கள் உணவாக சாப்பிட்டு வருகிறோம்.

சில மாதங்களுக்கு முன்னர் தொலைக்காட்சியில் செய்தியை பார்த்தபோது, நீங்கள் மக்கள் மீது ரசாயன தாக்குதலை நடத்தியதை கண்டு அதிர்ச்சி அடைந்தோம். ஆனால், கடவுள் எங்களை காப்பாற்றி விட்டார்.

உங்கள் ரசாயன குண்டுகள் எங்களை கொல்லவில்லை. ஆனால், உங்களுடைய கோபம் உங்களை கொன்று விடும். கடவுள் உங்களை விரைவில் அழித்து விடுவார்’’ என கடுமையாக பேசியுள்ளார்.

இதே பகுதியில் வசிக்கும் சில குழந்தைகளும் சிரிய ஜனாதிபதி பஷாருக்கு எதிராக கடுமையாக பேசியுள்ளது குறிப்பிடத்தக்கது.


”கடவுள் விரைவில் உங்களை அழிப்பார்”: சிரியா ஜனாதிபதியை கடுமையாக சாடிய குழந்தைகள்... Reviewed by Author on December 15, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.