அண்மைய செய்திகள்

recent
-

நத்தார் தினத்­திற்கு முதல் நாள் பூமியை கடக்கவுள்ள விண்கல்...


எதிர்­வரும் நத்தார் தினத்­திற்கு முதல் நாள் மாலை 1.5 மைல் விட்­ட­மு­டைய விண்­கல்­லொன்று பூமிக்கு அண்­மையில் கடந்து செல்­ல­வுள்­ள­தாக விண்­வெளி ஆராய்ச்­சி­யா­ளர்கள் தெரி­விக்­கின்­றனர்.

163899 என அறி­யப்­படும் இந்த 1.5 மைல் அக­ல­மான 2003 எஸ்.டி.220 விண்கல் 6.7 மில்­லியன் மைல் தொலை வில் பூமியை கடந்து செல்­ல­வுள்­ளது.



இந்தத் தூரம் பூமி­யி­லி­ருந்து சந்­திரன் உள்ள தூரத்­திலும் 28 மடங்கு அதி­க­மாகும்.

மேற்­படி விண்கல் பூமி­யி­லி­ருந்து மிகவும் தூரத்தில் கடந்து செல்­கின்ற போதும் அந்த விண்­கல்லால் பூமியில் பூமி­ய­திர்ச்­சிகள் மற்றும் எரி­மலைக் குமு­றல்கள் இடம்­பெ­று­வ­தற்­கான வாய்ப்­புள்­ள­தாக நிபு­ணர்கள் எச்­ச­ரித்­துள்­ளனர்.

ஆனால் விண்கல் கடந்து செல்­வ­தற்கும் எரி­மலைக் குமுறல் மற்றும் பூமி­ய­திர்ச்­சிகள் ஏற்­ப­டு­வ­தற்கும் தொடர்பு உள்­ள­மைக்­கான விஞ்­ஞான பூர்வமான சான்றுகள் எதுவும் இதுவரை கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

நத்தார் தினத்­திற்கு முதல் நாள் பூமியை கடக்கவுள்ள விண்கல்... Reviewed by Author on December 19, 2015 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.