சீனாவிற்கு காற்றை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் கனடா நிறுவனம்...

கனடாவை சேர்ந்த நிறுவனம் ஒன்று பெரும் மாசு சிக்கலில் தவித்துவரும் சீனாவிற்கு தூய்மையான மலைக் காற்றை பாட்டிலில் அடைத்து விற்பனை செய்ய தொடங்கியுள்ளது.
உலக அளவில் தொழில் துறையில் முன்னணியில் உள்ள சீனாவில் நாளுக்கு நாள் காற்று மாசடைந்து வருகிறது.
வாகனங்கள், மின்உற்பத்தி நிலையங்கள், தொழிற்சாலைகளில் இருந்து வெளியேறுகிற புகை, நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனால் இதுவரை இல்லாத அதிக அளவிலான பனி மூட்டத்தால் அங்கு பனிப் புகை ஏற்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. மேலும் வாகனங்களுக்கும் கட்டுப்பாடு விதிக்கப்படுள்ளது.
இந்நிலையில் கனடாவை சேர்ந்த விடாலிட்டி ஏர் என்ற நிறுவனம் பான்ஃப் மற்றும் லேக் லூயிஸ் ஆகிய மலைகளிலிருந்து பெறப்பட்ட தூய்மையான காற்றை பாட்டிலில் அடைத்து சீனாவிற்கு ஏற்றுமதி செய்துவருகிறது.
இது தொடர்பாக அந்நிறுவனத்தின் இயக்குனர் கூறியதாவது, கடந்த மாதம் காற்று நிரப்பப்பட்ட 500க்கும் மேற்பட்ட கேன்கள் சீனாவிற்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
அவை சில வாரங்களிலேயே விற்று தீர்ந்துவிட்டன.
தற்போது மீண்டும் 1000 கேன்கள் வரைக்கும் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன என்று தெரிவித்துள்ளார்.
கேன்களின் அளவை பொருத்து 14 முதல் 20 டொலர்கள் வரை அவைகள் விற்பனை செய்யப்படுகின்றன.
சீனாவிற்கு காற்றை பாட்டிலில் அடைத்து ஏற்றுமதி செய்யும் கனடா நிறுவனம்...
Reviewed by Author
on
December 17, 2015
Rating:

No comments:
Post a Comment