மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் கட்டுமானப்பணி---ஜனவரி மாதம் (படங்கள் இணைப்பு)

மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் கட்டுமானப்பணிக்காக இந்திய அரசாங்கத்தினால் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள 320 மில்லியன் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஆலய கட்டுமானப்பணிகள் எதிர்வரும் ஜனவரி மாதம் ஆரம்பிக்கப்படவுள்ளதாக அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் பிரதம குரு கருணானந்தக்குருக்கள் தெரிவித்தார்.
தற்போது அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் கட்டுமானப்பணிகளுக்காக இந்திய நாட்டின் மாமல்லபுரத்தில் இருந்து கொண்டு வரப்பட்ட சிற்ப வேலைப்பாடுகளை கொண்ட கருங்கல்லை பயண்படுத்தி குறித்த வேளைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படவுள்ளது.
திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பிக்கப்படவுள்ள நிலையில் கடந்த யூன் மாதம் 7 ஆம் திகதி திருக்கேதீச்சரத் திருத்தலத்தில் பாலஸ்தாபனம் செய்யப்பட்டு திருத்தலத்தில் உள்ள விக்கிரகங்கள் இடமாற்றம் செய்யப்பட்டது.
அதனைத்தொடர்ந்து புதிய திருத்தலம் அமைப்பதற்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு கடந்த நவம்பர் மாதம் 22 ஆம் திகதி இடம் பெற்றதோடு ஏற்கனவே காணப்பட்ட அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தல கட்டிடம் தற்போது உடைக்கப்பட்டு வருகின்றது.
எதிர்வரும் ஜனவரி மாதம் திருத்தலத்தின் கட்டுமானப்பணிகள் ஆரம்பமாகி சுமார் ஒரு வருடங்களில் கருங்கள் வேலைத்திட்டங்கள் நிறைவடையும்.
எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் மஹா கும்பாவிசேகம் நடை பெற்றும் என அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் பிரதம குரு கருணானந்தக்குருக்கள் மேலும் தெரிவித்தார்.
மன்னார் அருள் மிகு திருக்கேதீச்சரத் திருத்தலத்தின் கட்டுமானப்பணி---ஜனவரி மாதம் (படங்கள் இணைப்பு)
Reviewed by Author
on
December 14, 2015
Rating:

No comments:
Post a Comment