அண்மைய செய்திகள்

recent
-

2 நிமிட இடைவெளியால் வெவ்வேறு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள்: கலிபோர்னியாவில் ருசிகரம்


அமெரிக்காவில் 2 நிமிட இடைவெளி காரணமாக இரட்டையர்களில் ஒருவர் 2015ஆம் ஆண்டும் மற்றொருவர் 2016 ஆண்டும் பிறந்த சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
அமெரிக்காவின் கலிபோர்னியா மாகணத்தை சேர்ந்தவர்கள் லூயிஸ் மற்றும் மரிபெல் தம்பதியினர்.

லூயிஸ் கப்பற்படையில் மெக்கானிக்காக பணியாற்றிவருகிறார். மரிபெல் விமான நிலையத்தில் காசாளராக பணி செய்கிறார்.

கடந்த வியாழன் அன்று மரிபெல்லுக்கு பிரசவ வலி ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அவர் அவசர அவசரமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவருக்கு 11.59க்கு அழகான பெண் குழந்தை பிறந்துள்ளது. பின்னர் 2 நிமிட இடைவெளியில் 12.01க்கு ஆண் குழந்தை பிறந்தது.

மருத்துவ வரலாற்றில் அரிதும் அரிதாக இரட்டையர்கள் வெவ்வேறு ஆண்டுகளில் பிறந்தது மருத்துவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

இந்நிலையில் குழந்தைகள் இருவரும் ஆரோக்கியதுடன் பிறந்திருப்பது தங்களுக்கு கிடைத்த புது வருட ஆசிர்வாதம் என்று குழந்தைகளின் தந்தை லூயிஸ் தெரிவித்துள்ளார்.

பெண் குழந்தைக்கு ஜெலின் என்றும் ஆண் குழந்தைக்கு லூயிஸ் என்றும் அவர்கள் பெயர் வைத்துள்ளனர்





2 நிமிட இடைவெளியால் வெவ்வேறு வருடங்களில் பிறந்த இரட்டையர்கள்: கலிபோர்னியாவில் ருசிகரம் Reviewed by Author on January 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.