அண்மைய செய்திகள்

recent
-

‘சார்லி ஹெப்டோ’ தாக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு: பரபரப்பான புதிய கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகை...


பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ‘சார்லி ஹெப்டோ’ பத்திரிகை அலுவலகம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவடைந்துள்ள நிலையில், புதிதாக கேலிச்சித்திரம் ஒன்றை பத்திரிகையில் வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரான்ஸ் நாட்டு தலைநகரான பாரீஸில் இயங்கி வந்த ‘சார்லி ஹெப்டோ’ என்ற பத்திரிகை கடந்த 2006ம் ஆண்டு இஸ்லாமியர்களின் இறை தூதரான முகமது நபிகளை அவமதிக்கும் விதத்தில் கேலிச்சித்திரம் வெளியிட்டது.

இதனை கடுமையாக கண்டித்த அல்-கொய்தா தீவிரவாத அமைப்பு கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி 7ம் திகதி சார்லி ஹெப்டோ பத்திரிகை மீது தாக்குதல் நடத்தினர்.

இந்த தாக்குதலில் 8 அலுவலக ஊழியர்கள் உள்பட 12 பேர் கொல்லப்பட்டனர்.

இந்த தாக்குதலை நினைவுப்படுத்தும் விதத்தில், தற்போது வெளியாக உள்ள சிறப்பு ஆண்டு பத்திரிகையின் முகப்பு பக்கத்தில் கேலிச்சித்திரம் ஒன்றை வெளியிட்டுள்ளது.

எதிர்வரும் புதன்கிழமை அன்று விற்பனைக்கு வரும் இந்த பத்திரிகையின் முகப்பில், ‘தாடியுடன் உள்ள ஒரு நபர் கடவுளாக சித்தரிக்கப்பட்டுள்ளார்.

மேலும், தன்னுடைய முதுகிற்கு பின்னால் நவீன துப்பாக்கி ஒன்றை வைத்துக்கொண்டு ‘ஒரு வருடம் முடிந்துவிட்டது. அலுவலகத்தை தாக்கிய தீவிரவாதிகள் இன்னும் நடமாடிக்கொண்டு இருக்கின்றனர்’ என்ற வாசகங்கள் பதியப்பட்டுள்ளது.

பத்திரிகையின் தலைமை நிர்வாகியான Laurent Sourisseau என்பவர் ஒரு சிறப்பு கட்டுரையும் இந்த பதிப்பில் எழுதியுள்ளார்.

அதில் ‘குரான் புத்தகத்தின் வாசகங்களால் சில பைத்தியக்காரர்கள் காட்டுமிராண்டிகளாக மாறியுள்ளதாக’ கடுமையாக கண்டனங்களை தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

‘சார்லி ஹெப்டோ’ தாக்கப்பட்டு ஒரு வருடம் நிறைவு: பரபரப்பான புதிய கேலிச்சித்திரத்தை வெளியிட்ட பத்திரிகை... Reviewed by Author on January 04, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.