80,000 புகலிடக்கோரிக்கையாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானம்...
சுவீடனுக்கு கடந்த வருடம் வந்து புகலிடக் கோரிக்கை நிராகரிக்கப்பட்ட 80,000 குடியேற்றவாசிகளை நாட்டிலிருந்து வெளியேற்ற தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு உள்துறை அமைச்சர் அன்டர்ஸ் யகெமான் தெரிவித்தார்.
எனினும் மேற்படி குடியேற்றவாசிகளை வெளியேற்றும் செயற்கிரமம் பல வருட காலத்தை எடுத்துக் கொள்ளலாம் என அவர் கூறினார்.
கடந்த வருடம் சுவீடனில் புகலிடம் கோரி சுமார் 163,000 பேர் விண்ணப்பித்திருந்தனர். மேற்படி புகலிடம் கோரி விண்ணப்பிப்பவர்கள் தொகை இந்த வருடம் சுவீடன் எல்லைக் கட்டுப்பாடுகளை பலப்படுத்தியதையடுத்து வீழ்ச்சி கண்டது.
கடந்த வருடத்தில் அந்நாட்டில் 58,800 விண்ணப்பங்கள் பரிசீலனைக்குட்படுத்தப்பட்டு அவற்றில் 55 சதவீதமான விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தன.
ஐரோப்பாவுக்குள் சட்டவிரோதமாக விஜயம் செய்பவர்களுக்கான பிரதான புகலிட நாடுகளாக ஜேர்மனியும் சுவீடனும் விளங்கி வருகின்றன.
மேற்படி குடியேற்றவாசிகளில் அநேகர் உள்நாட்டுப் போரால் பாதிக்கப்பட்ட சிரியா, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளைச் சேர்ந்தவர்களாவர்.
இந்நிலையில் டென்மார்க்கில் தங்க அனுமதிக்கப்பட்டுள்ள குடியேற்றவாசிகள் தொடர்பில் அன்டர்ஸ் யகெமான் விபரிக்கையில், புகலிடம்கோரி புதிதாக விண்ணப்பித்தவர்களில் எத்தனை பேரை ஏற்றுக் கொள்வது என்பது குறித்து அதிகாரிகளும் நீதிமன்றமும் தீர்மானிக்கவுள்ளதாக கூறினார்.
அதேசமயம் புகலிடக்கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளவர்களை வெளியேற்றும் நடவடிக்கையை முன்னெடுக்க பொலிஸாரையும் அதிகாரிகளையும் அரசாங்கம் கோரியுள்ளதாக அவர் தெரிவித்தார்.
80,000 புகலிடக்கோரிக்கையாளர்களை நாட்டிலிருந்து வெளியேற்றுவதற்கு சுவீடன் அரசாங்கம் தீர்மானம்...
Reviewed by Author
on
January 29, 2016
Rating:

No comments:
Post a Comment