ஐரோப்பாவை வந்தடைந்துள்ள குடியேற்றவாசிகளான 3000 சிறுவர்களை ஏற்பதற்கு பிரித்தானிய பிரதமர் மறுப்பு
ஐரோப்பாவுக்கு பயணத்தை மேற்கொண்டு வந்த குடியேற்றவாசிகளான 3,000 சிறுவர்களை பிரித்தானியா ஏற்றுக் கொள்ள வேண்டும் என முன்வைக்கப்பட்டிருந்த கோரிக்கையை அந்நாட்டுப் பிரதமர் டேவிட் கமெரோன் புதன்கிழமை நிராகரித்துள்ளார்.
மேற்படி சிறுவர்களை ஏற்றுக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறு தொண்டு ஸ்தாபனங்களும் எதிர்க்கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களும் பிரதமருக்கு கடும் அழுத்தத்தைக் கொடுத்து வந்த நிலையிலேயே அவர் மேற்படி நிராகரிப்பை வெளியிட்டுள்ளார்.
அந்த சிறுவர்களை ஏற்றுக் கொள்வது மேலும் பல்லாயிரக்கணக்கான சிறுவர்கள் ஆபத்து மிக்க கடல் பயணத்தை மேற்கொண்டு ஐரோப்பாவுக்கு பயணிப்பதை ஊக்குவிப்பதாக அமையும் என டேவிட் கமெரோன் தெரிவித்துள்ளார்.
சிரியா, துருக்கி, லெபனான் மற்றும் ஜோர்தான் ஆகிய நாடுகளிலுள்ள அகதி முகாம்களுக்கு ஐரோப்பாவிலுள்ள எந்தவொரு நாட்டையும் விடவும் அதிகளவில் நிதியுதவியை பிரித்தானியா வழங்கியுள்ளதாக தெரிவித்த கமெரோன், ஐரோப்பிய பிரதான நிலப் பகுதியை வந்தடைந்துள்ள குடியேற்றவாசிகளை ஏற்றுக் கொள்வதை விடவும் நேரடியாக போரால் பாதிக்கப்பட்ட நாடுகளிலுள்ள குடியேற்றவாசிகளை மீளக்குடியமர்த்துவதில் ஐக்கிய நாடுகள் சபையுடன் இணைந்து பிரித்தானியா பணியாற்றவுள்ளதாக கூறினார்.
பிரித்தானிய தொழில் கட்சியானது 3,000 குடியேற்றவாசி சிறுவர்களை அந்நாடு ஏற்றுக் கொள்வதை நிர்ப்பந்திக்கும் வகையில் சட்டத்தில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கு முயன்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
ஐரோப்பாவை வந்தடைந்துள்ள குடியேற்றவாசிகளான 3000 சிறுவர்களை ஏற்பதற்கு பிரித்தானிய பிரதமர் மறுப்பு
Reviewed by Author
on
January 29, 2016
Rating:

No comments:
Post a Comment