அண்மைய செய்திகள்

recent
-

சிங்கள, முஸ்லிம்களை மீள்குடியேற்ற வடக்கு முதலமைச்சருக்கும் ஆளுனருக்கும் இடையில் இணக்கம்?


போர் காரணமாக வடக்கு மாகாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட சிங்களவர்களையும், முஸ்லிம்களையும் மீளவும் சொந்த இடங்களில் குடியேற்றுவதற்கு வட மாகாண முதலமைச்சர் சீ.வி. விக்னேஸ்வரனும், மாகாண ஆளுனர் எச்.எம்.ஜீ.எஸ். பலிஹக்காரவும் இணங்கியுள்ளதாக கொழும்பு பத்திரிகையொன்று செய்தி வெளிளியிட்டுள்ளது.
போர் இடம்பெற்ற காலத்தில் வெளியேற்றப்பட்ட சிங்களவர்கள் மற்றும் முஸ்லிம்களின் உடமைகளை மீள வழங்கி அவர்களை சொந்த இடங்களில் மீள்குடியேற்றுவதற்கு விக்னேஸ்வரன், ஆளுனரிடம் இணங்கியுள்ளார்.

ஆளுனருக்கும் முதலமைச்சருக்கும் இடையில் இந்த விவகாரம் தொடர்பில் சில மாதங்களாக பேச்சுவார்த்தை நடத்தப்பட்டுள்ளதுடன், பேச்சுவார்த்தைகள் வெற்றிகரமாக முடிவுறுத்தப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற போது வெளியேற்றப்பட்டவர்களை எவ்வாறு மீள்குடியேற்றுவது என்பது குறித்த திட்டமொன்று வகுக்கப்பட்டுள்ளது.

போர் இடம்பெற்ற காலத்தில் பெருமளவில் தமிழர்கள் சொந்த இடங்களை விட்டு வெளியேற நேரிட்டதுடன், தெற்கிலிருந்து வடக்கிற்கு சென்று வர்த்தக நடவடிக்கைகளில் ஈடுபட்ட சிங்கள, முஸ்லிம்களும் போர் காரணமாக வடக்கிலிருந்து வெளியேற நேரிட்டது.

இந்த மீள்குடியேற்ற திட்டத்திற்கு ஜனாதிபதி அனுமதி வழங்கியதன் பின்னர், வடக்கின் ஐந்து நிர்வாக மாவட்டங்களின் மாவட்டச் செயலாளர்களின் ஊhடக மீள்குடியேற்ற திட்டம் அமுல்படுத்தப்பட உள்ளது.

30 ஆண்டுகளுக்கு மேல் சொந்த இடங்களை இழந்து தெற்கில் வாழ்ந்து வந்த சிங்களவர்கள், முஸ்லிம்களை மீள்குடியேற்றுவதற்கு சமாந்திரமாக இடம்பெயர்ந்த தமிழ் மக்களையும் மீள்குடியேற்ற துரித நடவடிக்கை எடுக்கப்படும் என அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக குறித்த கொழும்பு பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.

சிங்கள, முஸ்லிம்களை மீள்குடியேற்ற வடக்கு முதலமைச்சருக்கும் ஆளுனருக்கும் இடையில் இணக்கம்? Reviewed by Author on January 31, 2016 Rating: 5

No comments:

Powered By New MANNAR, Designed by Theiveekan

Contact Form

Name

Email *

Message *

Powered by Blogger.